இப்பட்டியலினைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அனுப்பி அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என சரிபார்த்து அவ்வாசிரியரின் ஒப்பம் பெறப்பட்டு கோப்பில் வைத்திருத்தல் வேண்டும் . இப்பட்டியலில் சேர்க்கை / நீக்கம் / திருத்தம் ஏதுமிருப்பின் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடமிருந்து பெற்று இக்கடிதம் கிடைக்கப் பெற்ற ஒரு வாரத்திற்குள் இவ்வியக்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். மேலும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் இடம் மாறியிருப்பின் அவ்விவரத்தினையும் உடன் தெரிவிக்க வேண்டும் . சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான தகுதி குறித்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே 01.01.2021 க்கான பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் ) பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

Home »
Padasalai Today News
» இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு!
இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு!
இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து
கணிதப் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த 159
ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்
செயல்முறைகள்!01.01.2021
நிலவரப்படி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட
பட்டியல்களின் அடிப்படையில் இடைநிலை / சிறப்பாசிரியர்கள் மற்றும்
உடற்கல்வி ஆசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் ) பதவி
உயர்வுக்கு தகுதியானவர்களின் முன்னுரிமை பெயர்ப்பட்டியல் ( Seniority List )
தயாரித்து இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படுகிறது.
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...