உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பேணல் வெளியீடு
மொத்தம் - 500 அதில்,
BT & BRT - 55 பேர்.
PG - 445 பேர்.
01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தவர்களின் விவரங்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு திருத்தம் / நீக்கம் / சேர்க்கை பெறப்பட்டதன் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட 1 முதல் 500 நபர்கள் கொண்ட பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 01.01.2021 நிலவரப்படியான பெயர் பட்டியலினை தங்களது மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி பட்டியலில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பார்வைக்கு உட்படுத்தி , அவர்களது பணிவிவரங்கள் சரியாக உள்ளனவா , என்பது குறித்து அவர்களது ஒப்புதலினை எழுத்து மூலம் பெற்றும் திருத்தங்கள் இருப்பின் சார்ந்த தலைமையாசிரியரின் மேலொப்பத்துடன் பெற்று முதன்மைக்கல்வி அலுவலகக் கோப்பில் வைத்து பராமரிப்பதுடன் , மாவட்ட அளவிலான சேர்க்கை , திருத்தம் , நீக்கம் குறித்த விவரங்களை கீழ்க்காணும் படிவத்தில் தொகுத்து 18.02.2020 க்குள் இவ்வியக்கக c1sec.tndse@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . பார்வை 2 ல் கண்ட அரசாணையின்படி பட்டதாரி ஆசிரியர் முதுகலையாசிரியர்கள் , உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் நியமனம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரம் முதன்மைக்கல்வி அலுவலருக்கு ( நியமன அலுவலர் ) வழங்கப்பட்டுள்ள நிலையில் கீழ்க்காணும் விவரங்களை கருத்தில் கொண்டு சேர்க்கை / நீக்கம் / திருத்தம் விவரப் பட்டியலினை உரிய ஆதாரங்களுடன் இணைத்து அனுப்பும் படி முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...