ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தொகுதி பங்கீடு குறித்தும் தேர்தல் அறிக்கை குறித்த ஏற்பாடுகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட 95% முடிந்துவிட்டது. வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியிலும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அதிமுக சார்பில் முதற்கட்டமாக 6 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் அறிக்கைக்கு குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...