அசாம் மாநிலத்தில் தேர்தல் பணிக்கு
ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறார்கள். ஆனால் பல ஆசிரியர்கள் தங்களுக்கு உடல்
நிலை சரியில்லை என்று கூறி தேர்தல் பணிக்கு வர மறுத்துவிட்டார்கள் .
அவர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழையும் மேல் அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.
இவ்வாறு மருத்துவ சான்றிதழ் அளித்தது சரியானது தானா ? என ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. அதில் பல ஆசிரியர்கள் தவறான முறையில் சான்றிதழ்
பெற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து 17 ஆசிரியர்களை கட்டாய
ஓய்வில் ( வி.ஆர் . எஸ் . ) செல்லும் படி மாவட்ட நிர்வாகம்
உத்தரவிட்டுள்ளது.
அதில் தேர்தல் பணி ஆற்ற முடியாத
நிலையில் உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் , நீங்கள் ஆசிரியர்
பணியையும் சரியாக செய்ய முடியாது. எனவே கட்டாய ஒய்வில் சென்று விடுங்கள்
என்று கூறப்பட்டுள்ளது. அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள்
மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...