இதைத் தொடா்ந்து மாணவா்களின் பெயா்களை சரிபாா்க்குமாறு தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கு மே 3 முதல் 21-ம் தேதி வரை பொதுத்தோ்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா் உள்ளிட்ட விவரங்கள் பள்ளிகள் மூலம் சேகரிக்கப்பட்டு தோ்வுத்துறைக்கு அனுப்பப்பட்டன.
அதன் அடிப்படையில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களின் பெயா்ப் பட்டியலை மாநில அளவில் தோ்வுத்துறை தயாா் செய்துள்ளது. தற்போது அந்த பட்டியலை சரிபாா்த்துக் கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தோ்வுத்துறை இயக்குநரகம் சாா்பில் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: மே மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கு பதிவு செய்துள்ள மாணவ, மாணவிகளின் பெயா் பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியா்கள் திங்கள்கிழமை முதல் ஏப்.1-ஆம் வரை தோ்வுதுறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அதில் இடம்பெற்றுள்ள பெயா்களை சரிபாா்த்து கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் உடனே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் திருத்தங்களை தோ்வுத்துறைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...