புதுச்சேரியில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கொரோனா தொற்று குறைந்ததால் பல கட்ட ஆலோசனைகளுக்கு பின் கடந்த புதுச்சேரி அரசின் உத்தரவுபடி கடந்தாண்டு அக்டோபர் 8ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. முதலில் 9, 10,11 மற்றும் 12ம்வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு மதியம் 1 மணி வரை வந்து சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் துவக்கி நடத்தப்பட்டன. அதன்பின்னர் அனைத்து வகுப்புகளும் துவங்கப்பட்டன.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 2020 - 2021ம் கல்வியாண்டில் கொரோனா காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் “ஆல் பாஸ்” என்று அறிவிக்கப்படுகிறார்கள். புதுச்சேரி மற்றும் காரைக்கலில் 10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் தமிழக வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி பெறுவார்கள். மகே மற்றும் யானம் பிராந்தியங்களைச் சேர்ந்த 10 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் முறையே கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேச வாரியங்களின் வழிகாட்டுதலின் படி தேர்ச்சி பெறுவார்கள்.
பள்ளிகள் ஒரு வாரத்தில் 5 நாட்கள் செயல்படும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும். 1 “முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு 2021 மார்ச் 31 வரை பள்ளிகள் செயல்படும். கோடை விடுமுறை 1 ஏப்ரல் 2021 முதல் தொடங்கும். இருப்பினும், அந்தந்த மாநில வாரியங்களின் தேர்வுகளின் அட்டவணைப்படி 10, 11 மற்றும் 12 வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2020 - 2021ம் கல்வியாண்டில் கொரோனா காரணமாக 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுதேர்வின்றி தேர்ச்சி அடைய செய்வார்கள் என்று சட்டப்பேரவையில் தமிழக பழனிசாமி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...