ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர்,கணினி பயிற்றுநர்,
உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான
அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்.11-ம் தேதி வெளியிட்டது.
இணையவழியிலான
தேர்வு ஜுன் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெறும் என்றும், இதற்கான
ஆன்லைன் விண்ணப்பப் பதிவுமார்ச் 1 முதல் 25 வரை நடைபெறும் என்றும்
அறிவித்தது.
இதையடுத்து,
பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகள், மார்ச் 1 அன்றுஆசிரியர் தேர்வு
வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க முயன்றனர். ஆனால் தொழில்நுட்பக்
கோளாறு காரணமாக முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு
தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகவும், ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள் விரைவில்
அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
18 நாட்களாகியும் ஆன்லைன் விண்ணப்பம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் பிஎட் முடித்தமுதுகலைப் பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து
முதுகலை பட்டதாரிகள் கூறும்போது, ‘‘தொழில்நுட்பக் கோளாறு காரணங்களால்
ஆன்லைன் பதிவு தள்ளிவைக்கப்படுவதாக தேர்வு வாரியம் அறிவித்து 18 நாட்கள்
ஆகியும் இன்னும் சரி செய்யப்படவில்லை. தொழில்நுட்ப பிரச்சினை
பெயரில்முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க தேர்வு வாரியம்
முயற்சிசெய்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது. எனவே, இனியும்
தாமதிக்காமல் உடனடியாக ஆன்லைன் விண்ணப்பப் பதிவை தொடங்க வேண்டும்’’
என்றனர்.
இதற்கிடையே, 4
ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வில் (தையல், ஓவியம்,
உடற்கல்வி, இசை)தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வுப் பட்டியலும் இன்னும் வெளியிடப்
படவில்லை.
அதேபோல், கடந்த
2019-ல்நடத்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு (பிஇஓ) முடிவையும்
ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை. அந்தத் தேர்வில்
பங்கேற்றவர்களின் மதிப்பெண் மட்டும் ஜன.27-ம் தேதி வெளியானது.
மேலும்,
கடந்த ஆண்டே நடத்தப்பட வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு, இடைநிலை
ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு ஆகியவற்றுக்கான அறிவிக்கைகூட
இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...