தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொது செயலாளர் திருமிகு செ. முத்துசாமி.ExMLC அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் இன்று மாலை 5.00 மணியளவில் செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்பொழுது ஏப்ரல் 24 உடன் பிளஸ் டூ மாணவர்களுக்கு செய்முறை தேர்வு முடிவடைவதால் அதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படவாய்ப்பு உள்ளது .
கடந்த காலங்களில் பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை சார்ந்த பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஒரே நாளில் தொடங்கும் விதமாக அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வந்ததைக் கவனத்தில் கொண்டு இந்த ஆண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறையை தொடக்கக்கல்வித்துறை சார்ந்த பள்ளிகளுக்கும் சேர்த்து அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் கொரானா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவுவதை கவனத்திற்கொண்டு ஆசிரியர்களில் சிரமத்தைப் போக்கும் வண்ணம் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது
தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் நமது ஐயா வைத்த கோரிக்கையை பள்ளிக்கல்வி இயக்குனர் உடன் பரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார் என்பதை நமது இயக்கம் பொறுப்பாளர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில மையம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...