அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு , பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டு தோறும் மே மாதத்தில் நடத்தப்படும். ஆனால் , கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில் கலந்தாய்வு நடத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து , ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.
ஆனால் , பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகிவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சில ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதன் விசாரணையில் பொதுமாறுதல் , பதவி உயர்வு கலந்தாய்வு ஆகிய இரண்டையும் சேர்த்து நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் , ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை மே மாதம் நடத்தப்படவுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...