திருக்குறள் :
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.
பொருள்:
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.
பழமொழி :
Good face needs no paint.
அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை
இரண்டொழுக்க பண்புகள் :
1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்
பொன்மொழி :
பகை ,தீமை இவற்றை எந்த அளவுக்கு நாம் விதைக்கிறோமோ அவை வட்டியுடன் திரும்பி வந்து நம்மையே சேரும்....சுவாமி விவேகானந்தர்.
பொது அறிவு :
1.பெருங்கடல்களில் மிகப் பெரியது எது?
பசுபிக் பெருங்கடல்.
2.குளிர் சாதனப் பெட்டியில் செலவிடப்படும் மின்திறன் எவ்வளவு வாட் ஆகும்?
500 வாட்
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
1)எடை குறைப்பு
தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உங்கள் மூளை விரைவிலேயே வயிறு நிறைந்து விட்ட உணர்வை ஏற்படுத்திவிடும். அதனால் நீங்கள் அதிகமாக சாப்பிட தேவையில்லை.மேலும் நீங்கள் தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உங்கள் நரம்பு மண்டலம் சீராக இருப்பதால் உணவில் உள்ள சத்துக்கள் நேரடியாக உடலுக்கு கிடைப்பதுடன் முழுமையாக செரிமானமடையும். எனவே உங்கள் எடை கூடுவது தடுக்கப்படுகிறது.
2)வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது
நீங்கள் தரையில் அமர்ந்து சாப்பிடும்போது உங்களுடைய கீழ் முதுகு, இடுப்பு, வயிறு என அனைத்தும் நேராக இருக்கும். இது வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கும். இது உங்களின் தசைகளை வலுவாக்குவதுடன் செரிமான மண்டலத்தை சரியாக செய்லபட வைக்கும்.
3)முழங்கால் மற்றும் இடுப்பு ஆரோக்கியம்
தரையில் அமர்ந்து சாப்பிடுவது இடுப்பை சுற்றியுள்ள பகுதிகளை வலுவாக்குகிறது மேலும் முதுகு வலியை குறைக்கிறது. இந்த நிலை இடுப்பு எலும்புகளை திறந்த நிலையில் வைப்பதுடன் கால்களை நெகிழ்வாக்குகிறது. கணுக்கால் மற்றும் கால் தசைகள் வலுப்படுகிறது. முழங்காலை மடக்கி வைத்திருப்பது அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
4)இதய ஆரோக்கியம்
உங்கள் கால்கள் உங்கள் இதயத்திற்கு கீழ் நோக்கி இருக்கும் போது உடலில் இரத்த ஓட்டம் கால்களை நோக்கி அதிகமாய் இருக்கும். அதே நேரம் நீங்கள் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருக்கும் போது இரத்த ஓட்டம் இதயத்தை நோக்கி அதிகரிக்கும். இது இதய ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
கணினி யுகம் :
குருவி கொடுத்த விதை
இன்றைய செய்திகள்
கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கைவிடப்பட்ட பிளாஸ்டிக் சாலை திட்டம்: மாநகராட்சி அலட்சியத்தால் பாழாகும் மதுரை வைகை ஆறு.
திருப்பத்தூர் அடுத்த மூக்கனூர் கிராமத்தில் வைணவக் கோயில்களுக்கு நிலக்கொடை வழங்கியதற்கான குறியீடுகள் அடங்கிய பாறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
ஷாஹீன் புயலால் கொட்டித்தீர்த்த பெருமழை: வெள்ளக்காடானது மஸ்கட்.
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெண்கலம்.
ஐக்கிய அரபு அமீரத்துக்கு எதிரான நட்புறவு கால்பந்து ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...