பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.10.21

  

திருக்குறள் :

அதிகாரம்: கேள்வி

குறள் : 416

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

பொருள்:
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

பழமொழி :

Business neglected is business lost.


பாராத செயல் பாழாகும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

வார்த்தைகள் மட்டும் உங்கள் செயலின் அளவீடாக முடியாது. வார்த்தைகளுடன் செயலும் பிறரால் அளவிடப்படுகிறது. ...ராமகிருஷ்ண பரமஹம்சர்.

பொது அறிவு :

1.அறைவெப்பநிலையில் திரவமாக இருக்கும் அலோகம் எது? 

புரோமின்.

2.விமானத்தில் இருக்கும் கருப்புப் பெட்டியின் நிறம் என்ன? 

ஆரஞ்சு நிறம்.

English words & meanings :

Wreath - a ring shaped flower arrangement, மலர் வளையம், 

Wreathe - surrounding or encircle something. சுற்றி பின்னுதல்

ஆரோக்ய வாழ்வு :

புதினா தேநீர்

இந்தியாவின் நறுமண மூலிகைகளில் முக்கியமான மூலிகையாக புதினா உள்ளது. புதினாவில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. எனவேதான் அனைவரும் புதினாவை சமையலில் சேர்க்கின்றனர். இது அதிகமான அளவில் ஆண்டி ஆக்ஸிடண்ட்களை கொண்டுள்ளது. இதனால் உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை இது தடுக்கிறது.

புதினா உடலுக்கு ஏற்படுத்தும் சுறுசுறுப்பு குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் வந்துள்ளன. ஒரு ஆய்வில் புதினாவை தினமும் சாப்பிட்ட விளையாட்டு வீரர்கள் அதிக ஆற்றலை பெற்றிருந்தனர். மேலும் அவர்கள் 25 சதவீதம் அதிக சுறுசுறுப்புடன் இருந்தனர். எனவே முதுமை காலத்தில் நம்மை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைப்பதில் புதினா முக்கிய பங்கு வகிக்கிறது.

கணினி யுகம் :

F12 - Save as. 

Shift + F12 - Save


அக்டோபர் 8

இந்திய வான்படை நாள்  

இந்திய வான்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.  தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய வான்படை நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.  இந்திய வான்படை சுமார் 170,000 வீரர்களைக் கொண்டுள்ளது. சுமார் 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் படையில் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது. 


நீதிக்கதை

துணிச்சலான சிறுவன்

ஒரு ஊரில், சிறுவன் ஒருவன் மிகவும் சுட்டித்தனமாக இருந்தான். ஒரு நாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

ஆபத்தான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா, கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார். 

அவர்கள் வந்ததும், இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. அதனால் கீழேயே விளையாடுங்கள் என்று பயமுறுத்தினார். இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். ஆனால், சுட்டிப் பையன் சரி சரி என்று தலையை ஆட்டிவிட்டு, மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான். 

அவனது நண்பர்கள், ஏறாதே பேய் உன்னை அடித்துவிடும் என்று கத்தினார்கள். இந்த மரத்திலே பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா நம்மைப் பயமுறுத்தியிருக்கிறார். என்று கூறினான். 

அதற்கு மற்ற சிறுவர்கள் உன் தாத்தா சொன்னபோது சரி என்று சொன்னாய் அது ஏன்? என்று கேட்டனர். எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன். என்று நண்பர்களிடம் கூறிக்கோண்டே மரத்தில் ஏறினான். 

நீதி :
தைரியத்துடன் இருத்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

08.10.21

◆ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன நாட்டுப் பானை ஓடுகளை மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

◆தமிழ்வழி படிப்புகளுக்கு கல்வி கட்டணத்தில் 25% சலுகை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு.

◆ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’ காப்பியத்தை சீனம், ஜப்பனீஸ், கொரியன், சிங்களம் உள்ளிட்ட 23 மொழிகளில் மொழிபெயர்க்கும் பணியை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

◆15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கான உரிமம் புதுப்பிப்பு கட்டணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 8 மடங்கு உயர்த்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

◆கரோனா முடிந்துவிட்டதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், நாம் முழுமையாக கரோனாவிலிருந்து வெளியே வரவவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

◆பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

◆சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் அனைத்து விருதுகளையும் அள்ளியது இந்தியா.

◆உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தார் அன்ஷூ மாலிக்.

Today's Headlines

 *Students of Thiruppullani Suresh Sudha Azhakan memorial Government Higher Secondary School at Ramnad District found 12th century Chinese pot shreds. 

* For Tamil Medium studies there will be 25% discount in their education fees:Tamil Nadu Open University took the decision. 

* The Central Classical Tamil Researching centre put their weight fully to translate the Epic "Manimekalai" one of the Five Great Epics into 23 different languages including Chinese, Japanese and Singala

* For The renewal of ownership for the 15 year old vehicles will be raised by 8 fold from next year declared The Central Road Transport Ministry 

* WHO warns that we do not fully recovered from Corona as many predict and believes. 

* There is a powerful earthquake recorded in Pakistan. 20 people died including 5 children. The rescue work is undergoing in full force. 

* In the International Hockey League India bagged all the awards 

* In the world boxing championship Anshu Malik made history by step up for the final round
Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive