திருக்குறள் :
குறள் : 422
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.
பொருள்:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
பழமொழி :
Tomorrow never comes.
கடந்து போனது கரணம் போட்டாலும் வராது
இரண்டொழுக்க பண்புகள் :
1. எப்போதும் நாம் தான் வல்லவன் என்ற
அகந்தையை ஒதுக்கி ..நல்லவனாய் வாழு நாளும் சிறக்கும் நீயும் சிறப்பாய்.
2. எண்ணம் உறுதியாக உன்னதமாக இருந்தால், எண்ணியபடி உயரலாம்.
பொன்மொழி :
*இழப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால் எந்த இழப்பும் வெற்றியாளருடைய பயணத்தையும் தடை செய்வதில்லை*
பொது அறிவு :
1.இந்திய நாட்டின் தேசியக்கொடியை வடிவமைத்தவர் யார்?
பிங்கலி வெங்கையா.
2. இந்தியாவில் அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம் எது?
கேரளா.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
சளித்தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில எளிய இயற்கை வழிகள் !!
*கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும். தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.
கணினி யுகம் :
அக்டோபர் 12
இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்
இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993 இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 (டி பி எச் ஆர் ஏ) இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. பாரிசில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீமானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது,
நீதிக்கதை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...