மக்கள் பள்ளி திட்டம் அக்.18ம் தேதி துவக்கம்!

.com/

  திருச்சி திருவெறும்பூரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ஒன்று மக்கள் பள்ளி, மற்றொன்று மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதாகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் அடுத்த வகுப்புக்கு வருகின்றனர்.

இதனால் படிப்பில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதை போக்குவதற்காக தன்னார்வத்தோடு வரும் இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் என ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நாள்தோறும் பாடம் கற்று கொடுக்க வேண்டும். இதற்கான பொறுப்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வசம் உள்ளது. இந்த திட்டம் வரும் 18ம் தேதி துவங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive