அரசுத்
தேர்வுகள் உதவி இயக்குநர் அ.பிச்சை முத்து தகவல்.
புதுக்கோட்டை,அக்.8:
நவம்பர் 2021 எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்
அ.பிச்சைமுத்து தகவல் தெரிவித்துள்ளார்.
இது
குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நவம்பர்
2021 இல் நடைபெறவுள்ள தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு
பொதுத்தேர்விற்கு அக்டோபர் 1 ஆம் தேதியன்று 12 1/2 வயது பூர்த்தி
அடைந்திருக்க வேண்டும். தனித்தேர்வர்கள் அறந்தாங்கியில் உள்ள அரசு ஆண்கள்
,பெண்கள் மேல்நிலை,மணல் மேல்குடியில் உள்ள அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி,புதுக்கோட்டையி ல் உள்ள இராணியார் பெண்கள்
மேல்நிலைப்பள்ளி,செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கீரனூரில் உள்ள
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் அக்டோபர் 11 ஆம் தேதி முதல் அக்டோபர்
18 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை( 14.10.2021 முதல்
17.10.2021 வரையிலான விடுமுறை நாட்கள் நீங்கலாக) நேரில் சென்று இணையதளம்
மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத்
தவறியவர்கள் அக்டோபர் 20 ஆம் தேதி அன்று தட்கல் திட்டத்தில் ரூ.500
கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துட்ன்
தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ 50 என மொத்தம்
ரூ 175 ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.தட்கலில்
விண்ணப்பித்த தேர்வர்கள் தட்கல் விண்ணப்ப கட்டணத் தொகை ரூ 675 செலுத்த
வேண்டும்.
முதன்முறையாக
தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட பள்ளி
மாற்றுச் சான்றிதழ் நகல்,பதிவுத்தாள் நகல்,பிறப்புச் சான்றிதழ் இவற்றில்
ஏதேனும் ஒன்றினை மட்டும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே
எட்டாம் வகுப்பு தேர்வெழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத
விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண்
சான்றிதழின்/சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க
வேண்டும்.
தனித்தேர்வர்கள்
ரூ.42 க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட
உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.ஆன்லைன் மூலம்
பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.தபால் மூலம்
பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.மேலும் இத்தேர்விற்கான விரிவான
தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
தேர்வானது
நவம்பர் 8 ஆம் தேதி முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் 12
மணி வரை நடைபெறும் என தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...