மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் – DA & HRA உயர்வு கணக்கீடு விபரம்!


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 28% மாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அரசு ஊழியர்கள் செப்டம்பர் மாத ஊதியத்துடன் 27% HRA தொகையை பெற உள்ளனர்.


HRA அதிகரிப்புபெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள், இப்போது அடிப்படை ஊதியத்துடன் 28 சதவீத அகவிலைப்படி (DA) உதவித்தொகையை பெற உள்ளனர். கூடுதலாக, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) கணிசமான உயர்வை கண்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் செப்டம்பர் மாத சம்பளம் இப்போது இரட்டை போனஸுடன் வரும். விதிகளின்படி, அரசு ஊழியர்களுக்கு DA தொகை 25 சதவிகிதத்தை தாண்டியதால் HRA தொகை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, மத்திய அரசும் HRA தொகையை 27 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் DA தொகை 25% தாண்டும் பட்சத்தில் HRA தொகையும் திருத்தப்படும் என ஜூலை 7, 2017 அன்று மத்திய செலவுத் துறை ஒரு உத்தரவை பிறப்பித்தது. இப்போது ஜூலை 1 முதல், அகவிலைப்படி 28 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. எனவே HRA தொகையையும் திருத்தப்படவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு உத்தரவின் படி, HRA தொகை X, Y மற்றும் Z என்ற நகரங்களின் அடிப்படையின் கீழ் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் X வகை நகரங்களுக்கான HRA அடிப்படை ஊதியத்தில் 27 சதவீதமாக இருக்கும். இதேபோல், Y வகை நகரங்களுக்கான HRA அடிப்படை ஊதியத்தில் 18 சதவீதம் ஆகும். மேலும் Z வகை நகரங்களுக்கு அடிப்படை ஊதியத்தில் HRA தொகை 9 சதவீதமாக இருக்கும். இப்போது 7வது சம்பள கமிஷன் பே மேட்ரிக்ஸ் படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ .18,000 ஆகும்.0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive