M.Ed படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: இணையதளம் மூலம் முகவரி அறிவிப்பு.

.com/

  தமிழகத்தில் உள்ள 6 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மூலம் நடத்தப்படும், முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்பு (எம்எட்) படிப்பில், இந்த  ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து, இன்று முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 

தமிழகத்தில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 6 கல்லூரிகளில் எம்எட் பட்டப் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு எம்எட் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இன்று முதல் 13ம் தேதி வரை www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org  ஆகிய இணைய தளங்களின் மூலம் பதிவு செய்யலாம். இணைய  தளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் அருகில் உள்ள கல்வியியல் கல்லூரியின் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்தினால் போதுமானது. இணைய தளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், மாணவர்கள் 044-28260098 என்ற எண்ணில் தொடர்பு  கொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம். இது தொடர்பாக care@tngasaedu.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தேவையான வழிகாட்டுதல்களை பெறலாம். விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணத்தை இணைய வழியில் அல்லது கல்லூரிகள் சேர்க்கை உதவி மையங்களில், இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை-6 என்ற பெயரில் வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive