ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு 2018 முதல் 2020 வரை ஊதிய உயர்வு இல்லாத நிலையில் கடந்த ஆண்டு 16.11.2020 அன்று 20 % சதவீத ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிர்ணயம் வழங்கப்பட்டது . வட்டார வளமைய தலைப்பின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய வேறுபாடு உள்ளதாக 20.11.2020 அன்று மதிப்புமிகு மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களிடம் கோரிக்கை கடிதத்தை மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டது . ஆனால் , இதுநாள் வரை ஊதிய நிர்ணயத்தினை மறுபரிசீலனை செய்யப்படாமல் புதியதாக 11.11.2021 அன்று 15 % ஊதிய உயர்வு வழங்கி இருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது . இதனால் 2010 ( RMSA ) 2014 , 2015 ( SSA ) தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு இன்னும் ஊதிய வேறுபாடு அதிகமாக உள்ளதால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தங்களின் மேலான பார்வைக்கு தெரிவித்துக் கொள்கிறோம் . ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதியப் பணியாளர்கள் சார்பில் தங்கள் பாதம் தொட்டு வேண்டுவது தொகுப்பூதிய பணியாளர்களின் ஒரே பணிநிலைக்கு நான்கு விதமான ஊதியம் என்பது வேலை செய்யும் இடத்தில் மிகப்பெரிய பாகுபாடு ஏற்படுகிறது . எனவே , ஊதிய வேறுபாடு அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்திடவும் மத்திய அரசு PAB -ல் உள்ளவாறு ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்தும் பின்னர் ஊதிய உயர்வு வழங்கிட எங்களின் வாழ்வாதாரத்தை காத்திட எங்களின் கோரிக்கையை நிறைவேற்றிட மதிப்பிற்குரிய அய்யா அவர்களை தாழ்மையுடன் வேண்டுகிறோம்
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதிய வேறுபாடு குறைபாடுகளை நிவர்த்தி செய்திட கோரிக்கை
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதிய வேறுபாடு குறைபாடுகளை நிவர்த்தி செய்திட கோரிக்கை
ஒருங்கிணைந்த
பள்ளிக் கல்வி தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதிய வேறுபாடு குறைபாடுகளை
நிவர்த்தி செய்திடவும் திருத்திய ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்து PAB
ஊதியம் வழங்கிட கோரிக்கை*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...