நடைபெற்ற செப்டம்பர் 2021 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ / மாணவியர்களின் தேர்வு முடிவுகள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 29.11.2021 அன்று காலை 11.00 மணி முதல் அறிந்து கொள்ளலாம் எனவும் , தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 29.11.2021 அன்று காலை 11.00 மணி முதல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது . செய்ய விண்ணப்பிக்க மேற்படி மாணவ / மாணவிகளில் விடைத்தாட்களின் ஒளிநகல் பெற / விடைத்தாட்களை மறுகூட்டல் விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து கொண்டு , அதனைப் பூர்த்தி செய்து , அவ்விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தொகையை கீழ்க்குறிப்பிட்ட நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி ஆன் - லைன் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது . விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் - 01.12.2021 ( புதன்கிழமை ) காலை 10.00 மணி முதல் 04.12.2021 ( சனிக்கிழமை ) மாலை 05.00 மணி வரை தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் . விடைத்தாளின் ஒளி நகல் பெறப்பட்டபின்னர் விருப்பமுள்ள தேர்வர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» DTE - ஆசிரியர் பயிற்சி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ / மாணவியர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - செய்திக் குறிப்பு.
DTE - ஆசிரியர் பயிற்சி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ / மாணவியர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - செய்திக் குறிப்பு.
செப்டம்பர் 2021 தொடக்கக் கல்வி
பட்டயத் தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள்
தேர்வு முடிவு வெளியிடுதல் மற்றும் விடைத்தாட்களின் மறுகூட்டல் (
Retotalling ) ஒளிநகலைப் ( Scan Copy ) பெறுவதற்கான விண்ணப்பங்கள்
வரவேற்பது குறித்தான செய்திக் குறிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...