மார்ச் 2020 இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணியினை இணையதளம் வாயிலாக மேற்கொள்வது தொடர்பாக , ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இரண்டு கணினி பயிற்றுநர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டு , அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்ட கணினி பயிற்றுநர்களே , அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் , இணையதளம் மூலம் மேற்கொள்ளும் பணிக்கு அந்தந்த மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளராக ( Co - ordinator ) செயல்படவேண்டும் என பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாக அறிவிக்கப்பட்டது. தற்போது மாவட்ட வாரியாக செயல்பட்டு வரும் அரசுத் தேர்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் இத்துடன் இணைத்தணுப்பப்படுகிறது , புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி , திருப்பத்தூர் , கள்ளக்குறிச்சி , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கான தேர்வுப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக ( Co - ordinator ) செயல்படுவதற்கு நன்கு பயிற்சி பெற்ற இரண்டு கணினி பயிற்றுநர்களைத் தேர்வு செய்து , அவர்களின் பெயர் , பணிபுரியும் பள்ளி மற்றும் அலைபேசி எண் ஆகிய விவரங்களை 25.11.2021 - க்குள் மின்னஞ்சல் வாயிலாக இவ்வலுவலகத்திற்கு ( மின்னஞ்சல் முகவரி - deeflsec @ amail.com அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் , ஏற்கனவே தங்கள் மாவட்டத்தில் தேர்வுப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக ( Co - ordinator ) செயல்பட்டு வரும் கணினி பயிற்றுநர்களின் பட்டியலில் ஏதேனும் மாற்றம் இருப்பின் அதன் விவரத்தை 25.11.2021 - க்குள் இவ்வலுவலத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக ( மின்னஞ்சல் முகவரி dgeflsec@gmail.com ) அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» பொதுத்தேர்வு 2021 - மாவட்ட வாரியான ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியல் வெளியீடு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...