Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.02.22

    திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: பழைமை

குறள் எண்: 805

குறள்:
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்

பொருள்:
வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்

பழமொழி :

Face the danger boldly than live in fear.


அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர் கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும் எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன். 

2. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர் எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி :

குற்றம் குறையில்லாத மனிதன் யாருமில்லை. நல்லதும் கெட்டதும் கலந்ததே இந்த உலகம்.....காந்திஜி

பொது அறிவு :

1. இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் எது? 

மும்பை துறைமுகம். 

2. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் என்றழைக்கப்படுவது எது? 

உத்திரப்பிரதேசம்.

English words & meanings :

Ravenous - feeling very hungry, அகோரா பசி, 

scorching - extreme heat that may roast objects, பொருட்களை வதக்கும் சூடு

ஆரோக்ய வாழ்வு :

சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. அளவுக்கு அதிகமான பசி எடுப்பதை அடக்கும். சோம்பு தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கணினி யுகம் :

Edit - Ctrl + Alt + Enter. 

Edit note - Alt + Shift + E

பிப்ரவரி 18


மைக்கலாஞ்சலோ அவர்களின் நினைவுநாள்

மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.


மார்ட்டின் லூதர்  அவர்களின் நினைவுநாள்
மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது.

நீதிக்கதை


சிலந்தி கற்றுத் தந்த பாடம்

ஸ்காட்லாந்தின் மன்னனாக பொறுப்பேற்றான் ராபர்ட் புரூஸ் என்ற மன்னன். இருப்பினும் கொஞ்சமும் மன நிம்மதி இல்லை. இங்கிலாந்து நாட்டிற்கும், ஸ்காட்லாந்திற்குமிடையே மன வேறுபாடு அதிகரித்தபடி இருந்தது. இங்கிலாந்தின் மேல் படையெடுத்தும், தோல்வியே கிடைத்தது. புரூஸ், ஸ்காட்லாந்தில் நிச்சயமற்ற ஆட்சிப் பதவி வகித்து வரலானான். அவனுக்குப் போட்டியாக, ஜான் பாலியால் என்பவன், தானும் மன்னன் ஆகவேண்டும் என்பதில் மும்முரமாக ஈடுபடலானான்.

இந்த சிக்கலை இங்கிலாந்தின் மன்னன், எட்வர்டு தீர்த்து வைப்பதன் மூலம், இருநாட்டுப் பகையும் முடிவுக்கு வரும் என்று எண்ணி, அங்கு சென்றனர். இவர்களுக்கு சரியானபடி முடிவு கூறாமல், எட்வர்டு கேவலப்படுத்தினான். பேதைகளே... இந்த நாடு எங்களுக்குச் சொந்தம். நீங்கள் என் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். மன்னனாக ஆகக் கூடாது, விடவும் மாட்டேன், என்று தன் மார்பைத் தட்டினான்.

புரூசுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. தன் நாட்டை இழிவாகச் சொன்னவனை விடக்கூடாது என்று எண்ணியபடி, மேலும் படையெடுத்தான். இங்கிலாந்து மன்னனோ தக்க பதிலடி கொடுத்தான். பலமுறை போர் நடந்தது. இறுதி வரை ஆங்கிலேயர் வெற்றி பெற்றதோடு அல்லாமல், ஸ்காட்லாந்தில் மன்னர்கள் அமர்ந்து பதவி ஏற்கும், புனிதக்கல்லை பெயர்த்துச் சென்று லண்டன் நகரில் புதைத்தனர்.

ராபர்ட் புரூஸ் மிகுந்த துன்பத்துடன் மலைப்பகுதியில் உள்ள குகை ஒன்றை அடைந்தான். ஓரிடத்தில் ஓய்வெடுக்கலானான். ஒருபுறம் இருந்து தோன்றிய சூரிய ஒளியில், இவன் எதிரே சிலந்தி வலை ஒன்று தெரிந்தது. சிலந்தி வலையின் ஒரு இழையில், சிலந்தி ஒதுங்கிக் கொண்டு இருந்தது. அச்சிலந்தியானது அந்த இழையை எதிரே உள்ள குகையின் சுவற்றுடன் இணைத்துவிட முயற்சி செய்து கொண்டிருந்தது.

லேசான காற்று இழையில் தொங்கிய சிலந்தி, ஊசலைப் போல் ஆடலாயிற்று. ஒரு முறையல்ல, இரு முறையல்ல… சிலந்தி பலமுறை முயன்றது. சிறிதும் சோர்ந்து போகவில்லை. புரூஸ், சிலந்தியை உன்னிப்பாகக் கவனித்தான். கடைசியாக சிலந்தி தன் இழையை மறுமுனையுடன் இணைத்தது. சிறிது நேரம் நின்றுவிட்டு வலையைப் பின்ன ஆரம்பித்தது.

நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த புரூஸ், அதையே தன் லட்சியமாகக் கொண்டு, துள்ளி எழுந்தான். தன் வீரர்களைத் திரட்டினான். 30 ஆயிரம் பேர் இருக்கின்றனர். எதிரி நாட்டிலோ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இருக்கின்றனர். இம்முறை வெல்ல வேண்டும் என்று உறுதியுடன் அஞ்சா நெஞ்சுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்த்து, வெற்றி பெற்றான். ஆங்கிலேயரது படைவீரர்கள் சிதறி ஓடினர்.

ராபர்ட் புரூஸ், சிலந்தியை வழிகாட்டியாகக் கொண்டே எதிரியை விரட்டியடித்து, வரலாற்றில் முதல் இடத்தைப் பெற்றான். அவனது புகழுக்கு சிலந்தியே காரணம்

நீதி : விடா முயற்சி வெற்றியைத் தரும்

இன்றைய செய்திகள்

18.02.22


★தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஊர்க்கவால் படை, முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற காவல் துறையினர் என 1,13,073 பேர் ஈடுபட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

★உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர், விரைவில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைப்பை உருவாக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

★போடி மேற்கு மலையில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

★’போர் பதற்றத்தில் உள்ள உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர ஏதுவாக உக்ரைனுக்கு எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கிக் கொள்ளலாம்’ என்று ஏர் பபுள் கெடுபிடிகளைத் தளர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

★3 மணி நேரத்தில் 25.8 செ.மீ மழை பதிவு; வெள்ளத்தில் மிதக்கும் பிரேசில்: 58 பேர் பலி.

★பிரிட்டனில் கரோனா வைரஸின் இன்னொரு திரிபான டெல்டாக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

★வரவிருக்கும் ஆண்டுகளில் நடைபெறும் முக்கியப் போட்டிகளில் இந்திய வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் பொருட்டு தங்களை தயார் செய்துகொள்ள, 398 பயிற்சியாளர்களை நியமித்துள்ளது இந்திய விளையாட்டு ஆணையம் (SAI).

Today's Headlines

 ★ For the Local Body Elections, 1,13,073 persons were involved in the safeguarding and peaceful conduction of the elections in Tamilnadu information by DGP

After the local body elections, the formation of Tamilnadu Press Council will be sped up and TN CM gave permission for this 

In Podi West Mountain, the Tamilnadu government will not give permission for the Neutrino project - Tamilnadu government informed in the Supreme Court 

To bring Indians  from Ukraine we can operate as many as air crafts say the central government of India 

Within three hours record 25.8 cm rain. Brazil is floating in the flood. So far 58 persons died. 

In Great Britain, another mutated Coronavirus named Deltocron is found out. 

Indian Sports Academy appointed 398 coaches to improve the skills of Indian players so that they can participate in the matches with confidence
 Prepared by

Covai women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive