📚அகவிலைப்படி (Dearness Allowance - DA) உயர்வு குறித்த அறிவிப்புக்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரவிருக்கும் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தர கூடும் என தெரிகிறது.


📚ஏனென்றால் DA உயர்வு மட்டுமல்ல 18 மாத அரியர் பே (arrear pay) தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

📚அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசிடம் இருந்து இன்னும் முறையான அறிவிப்பு ஏதும் வெளியாகாத நிலையில், DA உயர்வு குறித்த முறையான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

📚மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு சதவீதத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் AICP index குறைந்தபட்சம் 4% உயர்த்தப்படலாம் என் கூறுகிறது. இதன் பொருள் மொத்த DA சதவீதம் 38-ஐ எட்ட கூடும். அதாவது ஊழியர்களுக்கான DA சதவீதம் 34-ல் இருந்து 38% அதிகரிக்கப்படலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை மாற்றியமைக்கப்படுகிறது.
 
📚முதலாவது ஜனவரி முதல் ஜூன் வரையிலும், இரண்டாவது ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்திலும் வழங்கப்படுகிறது. இதனிடையே மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இந்த முறை ஏன் 4% உயர்த்தப்பட உள்ளது என்பதை சமீபத்திய அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு தரவு (All India Consumers Price Index data ) தெளிவாக காட்டுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஏப்ரல் 2022க்கான அகில இந்திய CPI-IW 1.7 புள்ளிகள் அதிகரித்து 127.7-ஆக இருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதங்களுக்கு இடையில் பதிவு செய்யப்பட்ட 0.42 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், 1-மாத சதவீத மாற்றத்தில் இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 1.35 சதவீதம் அதிகரித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சமீபத்திய அமைச்சக அறிக்கைகளின் படி, மே மாதத்திற்கான AICPI புள்ளிவிவரங்கள் 129-ஆக உள்ளது. இதுவே DA-ல் 4% அதிகரிப்பதற்கான வாய்ப்பை உறுதி செய்கிறது. 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் கீழ் இந்த அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தப்பட்ச அடிப்படை சம்பளத்திற்கு ஆண்டுக்கு ரூ.8,640 உயர்வை எதிர்பார்க்கலாம்.


ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத காலமாக நிலுவையில் உள்ள டிஏ அரியர் தொகை பிரச்சனையையும் மத்திய அரசு தீர்க்கலாம் என்றும், அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் வரை நிலுவை தொகை கிடைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அக்டோபர் 2021 முதல் 17% இல் இருந்து 31% ஆக மாற்றப்பட்டது. இருப்பினும் நிலுவை தொகை இன்னும் டெபாசிட் செய்யப்படவில்லை.

முன்னதாக 1.16 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில், 2022-ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படியின் முதல் அதிகரிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 2021-ல், AICPI எண்ணிக்கை 125.4 ஆக இருந்தது. ஆனால், 2022 ஜனவரியில் 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக சரிந்தது.