NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

₹ 25 க்கு தேசியக் கொடி தபால் நிலையங்களில் விற்பனை!





நாளை முதல் இந்தியாவில் உள்ள அனைத்து 1,60,000 தபால் நிலையங்களும் நேரிலும் மற்றும் ஆன் லைனிலும் இந்திய தேசிய கொடியை விற்பனை செய்ய உள்ளது.
நமது இந்தியத்திருநாட்டின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 13,14,15 ஆகிய தேதிகளில் நாட்டில் உள்ள அனைவரும் அவரவர் வீட்டில் இந்திய தேசிய கொடியை ஏற்றி நம் இந்தியத்திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின நன்னாளை பெருமையுடன், மகிழ்ச்சியுடன், தலை நிமிர்ந்து கொண்டாடுவோம்.
கடந்த வாரம் ஜூலை 20, 2022 அன்று இந்திய அரசு, இந்திய தேசிய கொடி 2002 ஆம் ஆண்டு (CODE)(கோட்) (குறியீடு)ட்டில் ஒரு மாற்றம் செய்து புதிய அறிவிப்பானை வெளியிட்டது.
அதன்படி ஒவ்வொரு தனி நபரும் அவரவர் வீட்டில், வெட்ட வெளியில் (வீட்டின் முன்போ, அல்லது மொட்டை மாடியிலோ) இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் தேசிய கொடியை ஏற்றிக்கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர்.
இதற்கு முன்பு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற அனுமதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
20 இன்சுக்கு 30 இன்ச் அளவுள்ள தேசியக் கொடி ₹ 25 மட்டுமே.
இதைத் தவிர குறைவான இன்ச் அளவுகள் கொண்ட தேசிய கொடிகள் *_₹18 மற்றும் ₹9 க்கும்_* விற்பனை செய்யப்படும்.
அனைவரும் ஒரு *_25 ₹ செலவு செய்து_* ஒரு *_20 க்கு 30 இன்ச்_* தேசியக் கொடியை வாங்கி, நம் இந்தியத் திருநாட்டின் *_75 ஆவது_* சுதந்திர தினத்தை *_மிக, மிக, மிக, மிக, மிக, மிக, மிக பிரம்மாண்டமாய்_* கொண்டாடுவோம்,
இவர்களைத் தவிர மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசிய கொடிகள், காதிப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசிய கொடிகள், மற்றும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எட்டு சிறு குறு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்திய தேசிய கொடிகள் ஆகியவையும் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும்.
வாழ்க இந்தி(யர்)யா
வளர்க இந்தி(யர்)யா




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive