பெரும்பாலான வீடுகளில் வெந்தயம் ஒரு முக்கியமான சமையல் பொருளாக உள்ளது.
இதன் விதைகள் மட்டுமல்ல கீரையும் மருத்துவ குணம் நிறைந்தது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.
வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை அடங்கியுள்ளது. இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது.
இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் ஏற்படக்கூடிய முக்கியமான 5 நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்...
1. செரிமானத்தை மேம்படுத்தும்: வெந்தயத்தில் இயற்கையாகவே ஆன்டாக்சிட் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு, அமிலத்தன்மை, வயிறு வீக்கம் மற்றும் வாயு தொந்தரவு போன்ற பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது. இதற்கு ஊறவைக்கப்பட்ட வெந்தயத்தின் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்த தீர்வாக அமையும்.
2. கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு: வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் மற்றொரு நம்பமுடியாத விஷயம் கொலஸ்ட்ரால் அளவை எளிதாக கட்டுக்குள் வைப்பது தான். வெந்தயத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள், நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (எல்டிஎல்) அளவைக் குறைக்க உதவுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடையால் அவதிப்படுபவர்கள் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான தண்ணீருடன் பருகுவது நல்ல பலன் கொடுக்கும்.
3. மாதவிடாய் வலிகளில் இருந்து விடுதலை: வெந்தயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வயிற்று வலி, பிடிப்புகள் போன்ற தொந்தரவுகளை சரி செய்ய உதவுகிறது. குறிப்பாக வெந்தயம் ஊறவைத்த தண்ணீரில் உள்ள ஆல்காலய்டுகள் மாதவிடாய் வலியை குறைக்கும் என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
4. எடை இழப்பு: வெந்தயம் உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு நல்ல பலன் தரக்கூடியது. வெந்தயத்தில் உள்ள காலக்டோமன் என்ற பொருள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரையை கரைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, எளிதில் பசி எடுக்கவிடாமலும், அதிக உணவு உட்கொள்வதையும் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோர், இரவில் ஊறவைக்கப்பட்ட வெந்தயத்தின் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது எடை இழப்பில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர உதவும். இருப்பினும், தினசரி அதனை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
5. முடி மற்றும் சரும ஆரோக்கியம்: வெந்தயத்தில் உள்ள டியோஸ்ஜெனின், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், சேதமடையாமல் வைத்திருக்கவும் உதவுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...