முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து வேளாண் பல்கலை உத்தரவு.

முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து வேளாண் பல்கலை உத்தரவிட்டுள்ளது.

கோவை வேளாண் பல்கலையில் முதுநிலை பட்டமேற்படிப்பு பயிலகம் வாயிலாக எட்டு கல்லுாரிகளில் 32 துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது.வரும் 2022 - 23ம் கல்வியாண்டுக்கான முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த ஜூன் 27ம் தேதி துவங்கியது.முதுநிலை பிரிவில் 400 இடங்கள் உள்ளன. மாணவர்கள் https://admissionsatpgschool.tnau.ac.in/  என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆக. 8ம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பிக்க ஆக. 16ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து பல்கலை உத்தரவிட்டுள்ளது.இளநிலை முதுநிலை முடித்த மாணவர்கள் புரவிஷனல் சான்றிதழ்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்கலை பதிவாளர் அல்லது கல்லுாரி முதல்வர்களிடம் பெற்ற படிப்பு முடிவுற்ற சான்றிதழ் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் பட்டப்படிப்பு சான்றிதழை சமர்பித்த பிறகே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive