சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்

தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஆகஸ்ட் 5) தொடங்குகிறது.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் (சீர்மிகு சட்டப்பள்ளி உட்பட) உள்ள 3 ஆண்டு எல்எல்பி படிப்புகளில் 1,000-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவை நடப்புகல்வியாண்டில் இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுமுதல் தொடங்குகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் http://www.tndalu.ac.in/ என்றஇணையதளம் வழியாக ஆக.30 வரை விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு விதிகள், விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று பல்கலை. பதிவாளர் ரஞ்சித் ஒமென் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive