இந்த நோய் காரணமாக தற்போது வரை சுமார் 35பேர் மேற்படி மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நோய் புதிய வைரஸ் எனவும் இதுவரை உலகில் மனிதர்களைப் பாதிக்காத ஒரு நோய் எனவும் தாய்வானின் தொற்று நோய் எதிர்ப்பு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்படி வைரஸ் ஹெனிபா வைரஸ் (Henipavirus) குடும்பத்தை சேர்ந்தது என்றும், இதன் பிரிவுகள் ஹெண்ட்ரா வைரஸ் (Hendra virus ) மற்றும் நிபா வைரஸ் (Nipah virus) ஆகியன ஏற்கனவே மனிதர்களைத் தாக்கியிருக்கின்றது என்ற தகவலையும் வழங்கியுள்ளது.
இந்த தொற்று நோய்க்கு தடுப்பூசிகள் இல்லை எனவும், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...