60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மிக கனமழை எச்சரிக்கை!

imdchn.JPG?w=360&dpr=3

தென்மேற்கு வங்கக் கடலில் இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, அதையொட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் மழைப் பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கை கடற்கரையையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனு

அந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நவ. 11-க்குள் நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், நவம்பர் 10 முதல் 12 வரை தமிழகம், புதுச்சேரியில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive