பள்ளி மேம்பாட்டு திட்டம் - TNSED Parent app ல் பதிவேற்றம் செய்யும் வழி முறைகள்!!!

அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் :

 1. பள்ளி மேலாண்மை தலைவர்  தொலைபேசி எண் கொண்டு login செய்ய வேண்டும்.

 2.பின்பு திரையில் தோன்றும் மாதாந்திர பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற icon ஐ கிளிக் செய்து திட்டமிடுதல் &மதிப்பாய்வு  பகுதிக்குச் சென்றால் கீழ் பகுதியில்,புதிய திட்டம் என்ற ஒரு + குறியீடு  இருக்கும் அதை click செய்ய வேண்டும்.

3.திரையில் சேர்க்கை மற்றும் தக்க வைத்தல், கட்டமைப்பு, கற்றல், மேலாண்மை என்ற 4 உட்கூறுகள் இருக்கும்.

4.நான்கு உட்கூறுகள் அல்லது ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நமது பள்ளிக்குத்

 தேவையான திட்டங்களை அதில் பதிவேற்றம் செய்யலாம்.

5.ஒரு மாதத்திற்கு 10 பள்ளி மேம்பாட்டு திட்டங்களை மட்டுமே நாம்  பதிவேற்றம் செய்ய முடியும்..

  6.மிக அத்தியாவசியமான தேவைகளை முதலில் பள்ளி மாதாந்திர மேம்பாட்டு திட்டத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

7.நிதி ஆதாரம் தேவைப்படும் திட்டங்கள் மற்றும் நிதி தேவைப்படாத திட்டங்களையும் நாம் பதிவேற்றம் செய்யமுடியும்.

மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் SDP யை இன்று காலை 11 மணிக்குள் பதிவேற்றம் செய்யவும்,திட்டமிடல் காலம் முடிந்து விட்டால் பதிவேற்றம் செய்ய இயலாது.எனவே அடுத்த வரும்  மாதாந்திரபள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில்  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பள்ளி மேம்பாட்டு திட்டத்தை பதிவேற்றம் செய்திடவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive