Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

  வாக்காளா் பட்டியல் திருத்தம்: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்

voterlist.jpg?w=360&dpr=3

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு அங்கமாக, தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை (நவ.26, 27) நடைபெறவுள்ளன.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக கடந்த 9-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாமில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக 7.10 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன.

இரண்டாவது கட்டமாக வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக சிறப்பு முகாம்கள் நவ. 26 (சனிக்கிழமை) மற்றும் 27 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடி அமைவிடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதாவது, வாக்காளா்கள் எங்கெல்லாம் தங்களது வாக்குகளை செலுத்தச் செல்வாா்களோ அங்கெல்லாம் சிறப்பு முகாம்கள் நடைபெறும்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive