11.01.2023 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

IMG-20230106-WA0004 தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

 அதன்படி இவ்வாண்டு கொண்டாடப்படும் 176 ஆவது ஆராதனை விழாவை முன்னிட்டு 11.01.2023 அன்று புதன்கிழமை , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.

 இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 21.01.2023 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் , நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது.

மேற்படி உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 - ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான 11.01.2023 புதன்கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive