பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையா?

pongal_1901chn_175_1.jpg?w=360&dpr=3

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களின் மிக முக்கியப் பண்டிகைகளில் பொங்கல் பண்டிகை முதன்மையானது. தை பிறப்பே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அது ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. திங்கள்கிழமை மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படவிருக்கிறது.

வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு, லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அவர்களுக்காக சிறப்புப் பேருந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்புப் பேருந்துகள் நாளை முதலே இயக்கப்படவிருக்கின்றன.

இந்த நிலையில், வார இறுதி நாள்களில் பொங்கல் பண்டிகை வந்திருப்பதால், மக்களின் நலன் கருதியும், ஊருக்குச் செல்வோருக்கு வசதியாகவும், ஒரே நேரத்தில் பலரும் ஊருக்குச் செல்வதைத் தவிர்க்கவும், வரும் வெள்ளிக்கிழமையன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரத்திலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அவ்வாறு விடுமுறை அறிவிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டால், அது குறித்து முன்கூட்டியே அறிவித்தால், சொந்த ஊர்களுக்குச் செல்வோருக்கும், இதுவரை பேருந்து மற்றும் ரயில் என எதற்கும் முன்பதிவு செய்யாதவர்களுக்கும் நிச்சயம் பேருதவியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும், கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவையும் தவிர்க்கப்படலாம். பொங்கல் பண்டிகையே இப்படி ஞாயிற்றுக்கிழமையில் வந்துவிட்டதே என்று வேதனைப்படும் மாணவ, மாணவிகளுக்கு, வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டால் ஆறுதல் பரிசாக அமையலாம்.

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை கோயம்பேடு உள்பட 6 இடங்களில் இருந்து ஜன.12-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive