ஆந்திரபிரதேசம் |
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு
குறள்:349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
விளக்கம்:
ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.
Mice will pray when the cat is out
பூனை இல்லாத ஊரில் எலி நாட்டமை.
இரண்டொழுக்க பண்புகள் :
1.என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.2.பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
பொது அறிவு :
1. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
2. ஈராக் நாட்டின் தலைநகரம்
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
கோவை கீரை : கோடை காலத்தில் கோவை இலையைக் கஷாயமாகச் செய்து அருந்தினால், உடல் சூடு சமநிலைக்கு வரும். கண்கள் குளிர்ச்சி அடையும். கண் நோய்கள் வராமல் தடுக்கும்.
நீதிக்கதை
மனிதனாய் வாழ வேண்டும்
குருநாதர், தன் சீடனை அழைத்தார். "இந்தத் தெருவில் உள்ள நகை வியாபாரியின் வீட்டில் விருந்திற்கு நம்மையும் அழைத்திருக்கிறார்கள்" எனக் கூறினார்.
சீடனும் "உடனே செல்லுவோம் குருவே" என்றான். அவன் வாயில் எச்சில் ஊறியது.
"கொஞ்சம் பொறு பிள்ளாய், 'முதலில் நீ அங்கு சென்று எத்தனை மனிதர்கள் விருந்தில் கலந்து கொள்கிறார்கள் எனப் பார்த்து வா, பிறகு நாம் விருந்தில் கலந்து கொள்ளலாம்" என்றார் குரு.
"இதோ சென்று பார்த்து வருகிறேன் குருவே'' என்றபடி சீடன் குருகுலத்தை விட்டு வெளியே வந்தான்.
நிதானமாக சிந்தித்துப் பார்த்தான். விருந்தில் கலந்து கொள்ளும் மனிதர்கள் எத்தனை பேர் என்றல்லவா கணக்கெடுத்து வரக் கூறியுள்ளார். இது எதற்காக இருக்கும். ஏன் இப்படி நம்மிடம் கூறியுள்ளார். இதில் ஏதோ. உள் அர்த்தம் இருக்கிறது என சிந்தித்தவாறு சீடன் சென்றான்.
குருநாதர் கூறியதின் காரணமும் அவனுக்கு விளங்கிற்று. விருந்து நடக்கும் வீட்டிற்குச் செல்லும் போதே, கீழே கிடந்த நீளமான மரக்கட்டை ஒன்றையும் எடுத்துச் சென்றான்
சீடன் இப்பொழுது விருந்தினர் சாப்பிடும் இடத்திற்குச் செல்லவில்லை. விருந்தினா் சாப்பிட்ட பின் அனைவரும் கை கழுவச் செல்லும் இடத்திற்குச் சென்றான்.
அவர்கள் சாப்பிட்டு வரும் வழியில், தான் கொண்டு வந்திருந்த மரக்கட்டையை போட்டு வைத்தான். வருபவர் அனைவரும் அம்மரக்கட்டையில் தடுக்கி விட்டுக் கொண்டனர்.
"இம் மரக்கட்டையை யார் இங்கு போட்டார்கள்" என மனதிற்குள்ளும், சத்தம் போட்டும் திட்டிக் கொண்டே சென்றனர்.
இறுதியாக ஒரு பெரியவர் சாப்பாடு முடித்து வந்தவர், அவரும் அம்மரக்கட்டையில் தட்டிக் கொண்டார். நேரே சென்று கையைக் கழுவிக் கொண்டு வந்தார்.
அம்மரக்கட்டையை எடுத்து அப்புறப்படுத்தி ஒரமாகப் போட்டு விட்டுச் சென்றார். "இனிமேல் இங்கு வருபவர்களாவது இம்மரத்தில் தட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்" என எண்ணி இவ்வேலையைச் செய்து விட்டுப் போனார்.
பெரியவரின் செயலைக் கண்ட சீடன் மகிழ்ந்து, தன் குருவிடம் சென்று, மனித நேயமிக்க ஒரே ஒரு மனிதன் மட்டும் விருந்துக்கு வந்திருந்தார் என்றவன் அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.
நீதி : தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என எப்பொழுதும் நினைக்கக்கூடாது. தான்பட்ட துயரம் அடுத்தவரும் அனுபவிக்கக் கூடாது என நினைக்கும் மனிதரே. உண்மையில் மனிதராவார்.
இன்றைய செய்திகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...