ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு கூட்டம் நேற்றைய தினம் 6.2.24 சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.மகேந்திரன், திரு.சண்முகநாதன், திரு.வெங்கடேசன் ஆகியோர் கூட்டுத் தலைமை ஏற்றனர்.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. எதிர்வரும் 10.02.24 அன்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டினை மிகவும் எழுச்சியாக நடத்தியும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 500 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் - அரசு பணியாளர்கள் கலந்து கொள்ளவதற்கான பிரச்சார நடவடிக்கைகளையும் அதற்கான அரங்க ஏற்பாட்டினையும் செய்திடுமாறு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
2. இந்த வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில், மாவட்ட வாரியாக கலந்து கொள்ளும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர்மட்டக்குழு நிர்வாகிகள் பட்டியல் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
3. கடந்த 30.01.24 அன்று நடைபெற்ற மறியல் போராட்டத்தினை மிக எழுச்சியாக நடத்திட்ட அனைத்து மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுக்கும் உயர்மட்டக்குழு நிர்வாகிகளுக்கும் ஜாக்டோ ஜியோ நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
4. வாழ்வாதார கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற ஜாக்டோ ஜியோ போராட்ட களத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான அரசாணை எண் 243 இரத்து செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை இணைத்து களம் காண்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்திலுள்ள 12 இலட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள்-அரசு பணியாளர்கள் தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வென்றிட ஜாக்டோ ஜியோவால் மட்டுமே முடியும் என்ற உணர்வோடு நம் பின்னால் அணி திரண்டுள்ளதை மனதில் நிறுத்தி களப் பணியில் ஈடுபடுவோம். கோரிக்கைகளை வெல்வோம்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
ஜாக்டோ ஜியோ
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...