Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் அகவய மதிப்பெண்கள் வழங்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், மற்றும் மதிப்பிற்குரிய அரசு தேர்வுத்துறை இயக்குனர், மற்றும் மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி இயக்குனர் உட்பட அனைத்து இயக்குனர் பெருமக்களுக்கும் எனது பணிவான வணக்கத்தினை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உங்கள் அனைவருக்கும் எமது அமைப்பின் சார்பில் பணிவான வேண்டுகோள். அதாவது CBSE யில் பயிலும் SSLC மாணவர்களுக்கு அறிவியல் தவிர மற்ற பாடங்களுக்கு அகவய மற்றும் புறவய மதிப்பெண்களாக 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு 80 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுத்துத்தேர்வு எழுதுகிறார்கள். மேலும் நமது மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்து வரும் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மேல்நிலை வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு (அறிவியல் பாடம் தவிர) மற்ற அனைத்து பாடங்களுக்கும் அகவய , புறவய மதிப்பெண்களாக 10 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு 90 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. எனவே நமது மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து பாடத்திற்கும் (அறிவியல் தவிர) அகவய , புறவய மதிப்பெண்களாக 20 மதிப்பெண்கள் வழங்கி உதவுமாறு எமது பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் தங்கள் அனைவரையும் பணிந்து கேட்டுக் கொள்கிறேன். மேலும் நமது பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 100 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் எழுத்துத் தேர்வு எழுதுகிறார்கள். ஆனால் 90 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுத்துத் தேர்வு எழுதும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களும் மூன்று மணி நேரம் தேர்வு எழுதுகிறார்கள். மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களை மேற்பார்வை செய்யும் அறை கண்காணிப்பாளர்களுக்கு ரூ 60 / (ரூபாய் அறுபது மட்டும்) உழைப்பூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் 11, மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களை மேற்பார்வை செய்யும் அறை கண்காணிப்பாளர்களுக்கு உழைப்பூதியம் ரர ரூ 80/ (ரூபாய் எண்பது மட்டும்) வழங்கப்படுகிறது. 10, 11, 12 வகுப்பு எழுத்துத் தேர்வுகள் மூன்று மணி நேரம் தான் நடைபெறுகிறது. எனவே 11, 12, வகுப்பு எழுத்துத் தேர்வுகளை கண்காணிக்கும அறைக் கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ 80 / உழைப்பூதியம் போலவே, SSLC தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கும் உழைப்பூதியம் ரூ 80/- (ரூபாய் எண்பது மட்டும்) வழங்க வேண்டும் எனவும் எமது அமைப்பின் சார்பில் தங்கள் அனைவரையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மேலும் நமது மாநிலத்தில் பத்தாம் வகுப்பு (SSLC) பயின்று வரும் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலன் கருதி, (CBSE யில் SSLC தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவய , புறவய மதிப்பீடாக 20 மதிப்பெண்கள் வழங்குவது போல) நமது மாநிலத்தில் SSLC பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அகவய , புறவய மதிப்பீடாக 20 மதிப்பெண்கள் அனைத்து பாடங்களுக்கும் (அறிவியல் தவிர) வழங்கி அனைத்து மாணவர்களின் நலன்களையும் பாதுகாத்து உதவுமாறும் எமது பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் தங்கள் அனைவரையும் மீண்டும் பணிந்து கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றிங்க அய்யா. இவண், நல்லாசிரியர், ஆ.வ. அண்ணாமலை, மாநில சிறப்புத் தலைவர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், விழுப்புரம். கைபேசி எண்: 94436 19586




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive