Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நன்றி பாராட்டும் விழாவில் என்ன பேசினார்கள்...


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நன்றி பாராட்டும் விழாவில் என்ன பேசினார்கள்...

AIFETO.. 05.02.2024.
தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:-36/2001.

🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖

மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு....

அரசாணை எண் 243 நாள் 21-12-2023 வெளியிட்டதற்காக ஒரு சங்கம் சென்னையில் இன்று (04-02-2024) நடத்திய பாராட்டு விழாவில் திட்டமிட்டபடி கலந்து கொண்டு உள்ளார். அமைச்சர் அவர்கள் சமீபகாலமாக நாடு முழுவதும் கொண்டாடும் விழாக்களை கொண்டாடுவதும், மெய்மறந்து பூரிப்படைவதுமாக செயல்பட்டு கொண்டுள்ளார்கள். நாமும் அந்த மகிழ்ச்சியில் கலந்து கொள்கிறோம்.

மடைதிறந்த வெள்ளம் போல் பேசக்கூடிய மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நன்றி பாராட்டு விழாவில் கருத்துக்களை சொல்வதற்கு கூச்சப்படுகிறார்கள்.

அரசாணையை அமல்படுத்துவதில் நியாயம் உள்ளதாக அவர் உரையில் குறிப்பிடுகிறார். இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பே... இல்லை என்று சொல்கிறார். பெண் ஆசிரியர்களுக்கு நாங்களா பாதிப்பினை ஏற்படுத்துபவர்கள் என்று வேதனைப்படுகிறார். தலைவர் கலைஞர் அவர்களுடைய காலத்தில் பெண்ணாசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கும் செய்த நன்மைகளை பட்டியலிடலாம். ஐந்து முறை தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர் காலத்தில் ஆசிரியர்கள் எந்த அமைச்சருக்கு எதிராகவும் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தியதில்லை. ஆனால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் பெண் கல்வி உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து போன்ற சலுகைகளை செய்து வருவது உண்மைதான். ஆனால் 60 ஆண்டுகால கல்வி கட்டமைப்பினை சீர்குலைத்து, ஒன்றிய அளவில் இருந்த ஆசிரியர் முன்னுரிமை பட்டியலினை மாநில அளவில் கொண்டு சென்று, படு பாதகமான அரசாணை 243-ஐ வெளியிட்டது, மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் காலத்தில் தான் என்பதை நெஞ்சிருக்கும் வரை மறக்கத்தான் முடியுமா!!

 "இன்னது செய்கின்றோம் என்று அறியாமலேயே செய்து விட்டார்கள்"!! இறைவா மன்னித்தருளும்!! என்று சொல்வதைத் தவிர வேறு வழி எதுவும் எங்களுக்கு தெரியவில்லை.

 90 சதவீத ஆசிரியர்களுக்கு இந்த அரசாணை பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய அரசாணை என்பதை இன்னமும் உணரவில்லை என்றால் யார் பொறுப்பாவது!! கூடி பேசினால் 30 நிமிடத்தில் எங்களால் இதயத்தில் பதிவு செய்கின்ற விளக்கத்தை அளித்து உணர வைக்க முடியும். மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் அவசரப்பட்டு எடுத்த முடிவு என்பதற்கு மாற்றுக் கருத்து தெரிவிக்க முடியாது.

 வேதனையுறுகிறோம்!! வேதனையுறுகிறோம்!! கவலைப்படுகின்றோம்!! கவலைப்படுகின்றோம்!! திராவிட மாடல் அரசில் கல்வித்துறை அமைச்சருக்கு எதிராக கருப்பு பட்டை அணிந்து 38 மாவட்ட தலைநகரிலும் கோரிக்கை முழக்கமிட்ட முதல் வரலாறு!!! நமது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காலத்தில் தான் என்பது வரலாற்றில் இடம்பெற்று விட்டது!!! விளம்பரத்தில் காட்டுகின்ற ஆர்வத்தினை பிரச்சனைகளை தீர்வு காண்பதில் கவனம் காட்டினால் இழந்த பாதிப்பினை பெற்று மீண்டும் பெருமையினை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறோம். மாதம் முழுவதும் பள்ளியில் பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்கள், நிம்மதி இழந்து போர்க்களத்தில் நின்று கொண்டு முழக்கம் இடுகின்ற ஒலி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் காதில் விழவில்லையா?!!!

 "கூடிப் பேசினால் கோடி நன்மைகள் பிறக்கும்" என்பார்கள்!! நன்றி பாராட்டு விழாவில் நீங்கள் பேசிய உரையினை பதிவு செய்து கொண்ட பின்னர் தான் வெளிப்படைத்தன்மையுடன் பதிவு செய்கின்றோம்.

"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு"

 உரிமை உறவுடன் ஓர் இயக்கத்தின் மூத்த பொறுப்பாளர்....

 வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive