NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TN Budget 2024 - 2025 | முக்கிய அறிவிப்புகள் | Live

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தற்போது (பிப். 19) தாக்கல் செய்து வருகிறார்.
dinamani%2F2024-02%2Fca6cd875-fc6f-41b7-9853-8598d75191a6%2FWhatsApp_Image_2024_02_19_at_10_03_01_AM

பட்ஜெட் நேரம்.. தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட் உரை சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

TN Budget 2024 - 2025 | முக்கிய அறிவிப்புகள் : Live...


12:07 pm, 19 பிப்ரவரி 2024

தேசிய அளவிலான 7.24 சதவீத வளர்ச்சியை ஒப்பிடும்போது, 2022-23இல் தமிழ்நாடு 8.19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது


12:00 pm, 19 பிப்ரவரி 2024

நெடுஞ்சாலை துறைக்கு ரூ. 20,043 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


11:51 am, 19 பிப்ரவரி 2024

2024-25ஆம் ஆண்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.44,907 கோடி. கடந்தாண்டு பற்றாக்குறை ரூ.37,540 கோடி.


11:50 am, 19 பிப்ரவரி 2024

# தமிழக உயர்கல்வித் துறைக்கு ரூ. 8,212 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


11:50 am, 19 பிப்ரவரி 2024

தமிழகம் முழுவதும் முதல்வரின் இளைஞர் திருவிழா நடத்தப்படும். பேச்சு, கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்படும்.


11:49 am, 19 பிப்ரவரி 2024

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 440 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


11:48 am, 19 பிப்ரவரி 2024

# தமிழ்ப் புதல்வன்திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர்கல்விக்காக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இதற்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு.


11:46 am, 19 பிப்ரவரி 2024

1,000 பழமை வாய்ந்த கோயில்கள் ரூ. 100 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும். தேவாலயங்கள், மசூதிகளிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.


11:45 am, 19 பிப்ரவரி 2024

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாதம் ஒரு நாள் முழுவதும் ஒரு ஊரில் கள ஆய்வு மேற்கொண்டு, அங்கேயே தங்கி அரசு திட்டங்களை கண்காணிக்க வேண்டும். 


11:40 am, 19 பிப்ரவரி 2024

மதுரையில் ரூ.345 கோடியிலும், திருச்சியில் ரூ.350 கோடியிலும் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.


11:39 am, 19 பிப்ரவரி 2024

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 25,858 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


11:38 am, 19 பிப்ரவரி 2024

கைத்தறி, கைவினைப் பொருள்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம் அமைக்கப்படும்.


11:37 am, 19 பிப்ரவரி 2024

சென்னை அடுத்த முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்.


11:37 am, 19 பிப்ரவரி 2024

45 பலதுறை கல்லூரிகளை மேம்படுத்த ரூ. 3,014 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


11:36 am, 19 பிப்ரவரி 2024

சமூக பாதுகாப்புத்துறையின் பெயர் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை என மாற்றம் செய்யப்படுகிறது.


11:34 am, 19 பிப்ரவரி 2024

அயோத்திதாசப் பண்டிதர் குடிசை மாற்று திட்டத்துக்கு ரூ. 230 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


11:34 am, 19 பிப்ரவரி 2024

துண்டில் வளைகள், மீன் இறங்குதளக்கள் அமைக்க ரூ. 450 கோடி நிதி ஒதுக்கப்படும்.


11:31 am, 19 பிப்ரவரி 2024

திருப்பரங்குன்றன்,திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்.


11:26 am, 19 பிப்ரவரி 2024

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கீட்டையும் எடுக்க மத்திய அரசை வலியுறுத்திகிறோம்.


11:26 am, 19 பிப்ரவரி 2024

# ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி துறை கீழ் இயங்கும் பள்ளிகளை மேம்படுத்த ரூ. 36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


11:25 am, 19 பிப்ரவரி 2024

பழங்குடியினத்தினரை மேம்படுத்த தொல்குடி என்ற திட்டம் ரூ. 1,000 கோடியில் செயல்படுத்தப்படும்.


11:24 am, 19 பிப்ரவரி 2024

வணிகம்,தொழில்நுட்பத்துறை அலுவலகங்களுக்காக சென்னை சென்டர்ல் அருகே மரபுசார் வடிவமைப்புடன் 10 லட்சம் சதுர அடியில் 27 தளங்களுடன் ரூ. 688 கோடி மதிப்பில் கட்டடம் கட்டப்படும்.


11:22 am, 19 பிப்ரவரி 2024

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு -ஆவடி இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்படும்.


11:21 am, 19 பிப்ரவரி 2024

சென்னை மெட்ரோவுக்கு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


11:20 am, 19 பிப்ரவரி 2024

3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு இந்தாண்டே பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். சிற்றுந்து பேருந்து திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.


11:18 am, 19 பிப்ரவரி 2024

மெரினா,தூத்துக்குடி, புதுக்கோட்டை, கடலூர்ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகளை தேர்ந்தெடுத்து ரூ.250 கோடி மதிப்பில் மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தி நீள நிற கடற்கரை சான்றுகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


11:16 am, 19 பிப்ரவரி 2024

தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 1076 கி.மீ. கடற்கரை பகுதிகளை மையமாக கொண்டு நெய்தல் மீட்சி இயக்கம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே ரூ.343 கோடி மதிப்பில் பல்லுயிர் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.


11:12 am, 19 பிப்ரவரி 2024

தமிழ்நாடு நீர் வளம் மற்றும் தகவல் மையத்தை ரூ. 30 கோடியில் செயல்படுத்த அரசு ஒப்புதல்


11:09 am, 19 பிப்ரவரி 2024

குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவில் ராக்கெட் தளம் அமையவுள்ள இடம் அருகே விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.


11:08 am, 19 பிப்ரவரி 2024

சென்னை போன்று கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1,000 இடங்களில் இலவச வைஃப்பை சேவை வழங்கப்படும்


11:04 am, 19 பிப்ரவரி 2024

விருதுநகர், சேலத்தில் ரூ.2,483 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்.


11:03 am, 19 பிப்ரவரி 2024

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா விளையாட்டு மையம் அமைக்கப்படும்.


11:03 am, 19 பிப்ரவரி 2024

அனைத்து சிப்காட் பகுதிகளிலும் பணிபுரியும் பெண்களுக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.


10:59 am, 19 பிப்ரவரி 2024

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 20,198 கோடி ஒதுக்கீடு


10:58 am, 19 பிப்ரவரி 2024

ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்.


10:57 am, 19 பிப்ரவரி 2024

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ரூ. 243 கோடி ஒதுக்கப்படும். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் உச்சவரம்பு தொகை ஒரு லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும்.


10:55 am, 19 பிப்ரவரி 2024

# நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு


10:55 am, 19 பிப்ரவரி 2024

# பல்வேறு வங்கிகள் மூலம் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ. 2,500 கோடி கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்


10:53 am, 19 பிப்ரவரி 2024

கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.


10:52 am, 19 பிப்ரவரி 2024

ரயில்வே, வங்கிப் பணிகளில் தமிழக இளைஞர்கள் அதிகளவில் சேர கோவை, மதுரை மண்டலத்தில் விடுதி வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்க ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


10:49 am, 19 பிப்ரவரி 2024

கோவையில் அதிநவீன நூலகம் கருணாநிதி பெயரில் புதிதாக கட்டப்படும்.


10:49 am, 19 பிப்ரவரி 2024

# பள்ளிக் கல்வித்துறைக்கு வரும் கல்வியாண்டுக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


10:48 am, 19 பிப்ரவரி 2024

# பேராசிரியர் அன்பழகன் திட்டத்தின் கீழ் ரூ. 1,000 கோடியில் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.


10:46 am, 19 பிப்ரவரி 2024

#:இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


10:44 am, 19 பிப்ரவரி 2024

# மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களின் பள்ளி, கல்லூரி கட்டணங்கள், விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும்.


10:44 am, 19 பிப்ரவரி 2024

மாநிலம் முழுவதும் 10,000 சுய உதவிக் குழுக்கள் புதிதாக உருவாக்கப்படும்.


10:42 am, 19 பிப்ரவரி 2024

# அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டு முதல் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


10:40 am, 19 பிப்ரவரி 2024

# அரசுப் பள்ளிகளில் இருந்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் வரும் கல்வியாண்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.370 கோடி ஒதுக்கீடு


10:38 am, 19 பிப்ரவரி 2024

மகளிர் இலவச பேருந்து திட்டத்துக்காக இந்த நிதியாண்டில் ரூ. 3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவச பேருந்து திட்டம் விரிவுபடுத்தப்படும். 


10:36 am, 19 பிப்ரவரி 2024

மகளிர் நலன் காக்கும் திட்டங்களுக்காக ரூ.13,750 கோடி நிதி ஒதுக்கப்படும்.


10:33 am, 19 பிப்ரவரி 2024

அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


10:32 am, 19 பிப்ரவரி 2024

பூந்தமல்லி அதிநவீன திரைப்பட நகரம் அமைக்க ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


10:31 am, 19 பிப்ரவரி 2024

ஈரோடு, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் நொய்யல், வைகை ஆற்றங்கரைகளில் பூங்கா, திறந்தவெளி அம்சங்கள் அமைக்க திட்டப்பணிகள் மேற்கொள்ள ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


10:30 am, 19 பிப்ரவரி 2024

சைதாப்பட்டை முதல் திருவிக பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும்.


10:29 am, 19 பிப்ரவரி 2024

சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


10:25 am, 19 பிப்ரவரி 2024

தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியவர், ஒற்றை பெற்றோர் குழந்தைகள் கண்டறிந்து அடிப்படை வசதி, கல்வி உள்ளிட்டவை வழங்கப்படும்.


10:22 am, 19 பிப்ரவரி 2024

ரூ,365 கோடி மதிப்பில் 2,000 பழைய மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் சீரமைக்கப்படும்


10:20 am, 19 பிப்ரவரி 2024

தமிழகம் முழுவதும் ரூ.  1,000 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்.


10:17 am, 19 பிப்ரவரி 2024

2030-க்குள் தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்க்கிரிட் வீடுகள் கட்டித் தரப்படும். முதல்கட்டமாக 2024-25ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் ரூ.3.5 லட்சம் மதிப்பில் கட்டப்படும்


10:19 am, 19 பிப்ரவரி 2024

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியம் அமைக்க ரூ. 17 கோடி ஒதுக்கீடு.


10:17 am, 19 பிப்ரவரி 2024

2030-க்குள் தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்க்கிரிட் வீடுகள் கட்டித் தரப்படும். முதல்கட்டமாக 2024-25ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் ரூ.3.5 லட்சம் மதிப்பில் கட்டப்படும்


10:16 am, 19 பிப்ரவரி 2024

கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுத் திட்டங்களுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு


10:12 am, 19 பிப்ரவரி 2024

தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற 25 நூல்களை மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive