கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த புதிய வழிகாட்டுதல்கள் - நாள்: 02.09.2024
கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள் - நாள்: 02.09.2024 👇👇👇
*02.09.2024 கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள்*
*வகுப்பு 1 முதல் 12 வரை பள்ளி அளவில் நடத்தும் போட்டிகளை வீடியோ எடுத்திடல் வேண்டும். EMIS இணையதளத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் வீடியோக்களை மட்டும் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.*
*போட்டிகள் நடைபெறும் வகுப்பறைகளில் உள்ள கரும்பலகையில் கீழ்காணும் விவரங்கள் கண்டிப்பாக எழுதப்பட வேண்டும். இவ்விவரங்கள் வீடியோவில் பின்புலத்தில் காணப்பட வேண்டும். வீடியோவினை landscape mode -ல் எடுத்திடல் வேண்டும்.*
1. கலைத் திருவிழா 2024 - 2025
2. பள்ளியின் பெயர்
3. UDISE CODE
4. மாவட்டம்
5. ஒன்றியம்
6. போட்டியின் தலைப்பு
7. வகுப்பு
8. நாள் *போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் EMIS NO, வகுப்பு, போட்டியின் பெயர் விவரம் அடங்கிய அடையாள அட்டை அணிந்திருத்தல் வேண்டும்.*
*கரும்பலகையில் எழுதப்பட்ட தகவல்கள் 10 seconds மற்றும் மாணவரின் அடையாள அட்டையினை 10 seconds zoom செய்து எடுத்தபின் போட்டியினை கைகளை அசைக்காமல் நேராக வைத்து எடுக்கவும்.*
*ஒளியமைப்பு மாணவர்களுடைய முகத்தில் படுமாறு எடுக்க வேண்டும். அவர்களின் தலைக்கு பின்னால் இருந்து வெளிச்சம் வருவது போல் எடுக்க வேண்டாம்.*
*ஒலியமைப்பை ஒரு முறை பரிசோதித்த பின்னர் படப்பதிவு செய்திடவும்.*
*சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ள கால அளவுக்குள் எடுத்திடல் வேண்டும். அதிக கால அளவில் வீடியோ இருந்தால் பதிவேற்றம் ஆகாது.*
*மாணவர் படைப்புகளை எடிட் செய்து பதிவேற்றம் செய்தல் கூடாது.*
*90 மற்றும் 60 நிமிடப் போட்டிகளை மட்டும் கீழ்க்காணும் வகையில் வீடியோ எடுத்திடல் வேண்டும்.*
1. செயல்பாட்டின் தொடக்கத்தில்
2. செயல்பாட்டின் இடையில்
3. செயல்பாட்டின் முடிவில்
*என ஐந்து நிமிடம் இருக்குமாறு வீடியோ எடுத்திடல் வேண்டும்.*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...