Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2-ம் கட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

 
ஏப்​ரல் மாதம் நடை​பெறும் ஜேஇஇ 2-ம் கட்ட முதன்​மைத் தேர்​வில் பங்​கேற்க விரும்​புவோர் பிப்​.25-க்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என்று என்​டிஏ தெரி​வித்​துள்​ளது.
 

ஐஐடி, என்​ஐடி போன்ற மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலைப் படிப்​பு​களில் சேர ஒருங்​கிணைந்த நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்​டும். முதன்​மைத் தேர்​வு, பிர​தானத் தேர்வு என இது இரு பிரி​வாக நடத்​தப்​படும். இதில் முதன்​மைத் தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் 2 கட்​டமாக நடத்துகிறது.

அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான ஜேஇஇ முதல்​கட்ட முதன்​மைத் தேர்வு ஜன.21 முதல் 30-ம் தேதி வரை நடத்​தப்பட்​டது. சுமார் 12 லட்​சம் பேர் தேர்வு எழு​தினர். இதன் முடிவு​கள் பிப்​.12-ம் தேதி வெளியிடப்பட உள்​ளன. இதை தொடர்ந்​து, ஜேஇஇ 2-ம் ​கட்ட தேர்வு ஏப்.1 முதல் 9-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு தற்போது தொடங்​கி​யுள்ளது.விருப்​பம் உள்ள மாணவர்​கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் மூலமாக பிப்​.25-க்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

முதல்​கட்ட தேர்வை எழு​தி​ய​வர்​களும் பங்​கேற்​கலாம். தமிழ், ஆங்​கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடை​பெறும். ஹால் டிக்​கெட் வெளி​யீடு உள்​ளிட்ட இதர விவரங்​கள் பின்​னர் வெளி​யிடப்​படும் கூடு​தல் தகவல்​களை nta.ac.in என்ற தளத்​தில் அறிய​லாம். விண்​ணப்​பிப்​ப​தில் சிரமம் இருந்​தால், 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண் அல்​லது jeemain@nta.ac.in எனும் மின்​னஞ்​சலில் தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive