மே மாதம் தேர்வு நடக்கிறது
சென்னை, பிப்.5-
இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பல மாநில, தனியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு அதாவது, கியூட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) 1 நடத்துகிறது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வை எழுத முடியும். தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள் இந்த நுழைவுத் தேர்வை ஏற்று கொள்ளவில்லை என்றாலும், மத்திய பல்கலைக்கழகங்களில் இந்த நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருப்பதால், தமிழ்நாட்டில் மாணவமாணவிகள் சிலர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். அதன்படி, இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் (ஜனவரி) 3-ந்தேதி தொடங்கியது. ஆன்லைன் மூலம் நடந்த பதிவு நேற்றுடன் நிறைவு பெற்றிருக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்த வருகிற 7-ந்தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பம் செய்தவர்களில் தகு தியானவர்களுக்கான தேர்வு வருகிற மே மாதம் 11-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...