சட்டசபையில் ஏதாவது அறிவிப்பார்களா
மதுரை, பிப். 16-
தேர்தல் நெருங்கும் நிலையிலும் ஏமாற்றமடைந்துள்ளதால், நிலுவை கோரிக்கைகளை வென்றெடுக்க வழியென்று தெரியாமல் அதிருப்தியுடன் அரசு துறை ஊழியர்கள் போராட்டகளத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மதுரை, பிப். 16-
தேர்தல் நெருங்கும் நிலையிலும் ஏமாற்றமடைந்துள்ளதால், நிலுவை கோரிக்கைகளை வென்றெடுக்க வழியென்று தெரியாமல் அதிருப்தியுடன் அரசு துறை ஊழியர்கள் போராட்டகளத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஒவ்வொருதுறை ஊழியரும் துறைரதியான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இந்த ஊழியர்களின் பொது அமைப்புகளான அரசு ஊழியர், பணியாளர், என்.ஜி.ஒ., சங்கம் மற்றும் கூட்டமைப் புகளான ஜாக்டோ ஜியோ, ஆக்டோ ஜியோ, பெரா, அடாப் போன்ற கூட்ட மைப்புகளும் போராட்டங்களை முன்னெடுத்தன.
இவர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது இருந்தது.
இது 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
சில வாரங்களுக்கு முன் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிவித்து எதிர்ப்பின் தீவிரத்தை குறைத்துள்ளது.
இருப்பினும் பல்வேறு துறைகளின் நீண்டகால கோரிக்கைகள் நிலுவையிலேயே உள்ளன. இதனால் சமீபகாலமாக சத்துணவு, அங்கன்வாடி, ஊரக வளர்ச்சி, வருவாய், சர்வே, நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை என பலரும் நாளொரு போராட்டமும், தினமும் ஒரு வடிவமுமாக போராட்டம் நடத்துகின்றனர்.
அதிருப்தி ஊழியர்கள்
சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஊரக வளர்ச்சி அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்து 2 நாட்களாகபோராடினர். அவர்களுக்கு சில அரசாணைகளை வெளியிட்டதால், அவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டுள்ளது. இப்படி சில கோரிக்கைகளை நிறைவேற்றினாலும், பல அமைப்புகளுக்கு எவ்வித அறிவிப்பும் இல்லாததால் அதிருப்தியில் உள்ளனர்.
சத்துணவு, அங்கன்வாடி, சாலைப்பணியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குனர், பகுதிநேரஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் இந்த மனநிலையில் உள்ளனர்.
தேர்தல் நெருங்குவதால் இனி அரசு தரப்பிலும் பெரிதாக எதுவும் நிறை வேற வாய்ப்பில்லை. எதிர் தரப்பினரோ, வெற்றி பெற்றால் நிறைவேற்றுவோம் என்கின்றனர்.
எந்த ஆட்சியிலும் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறாததால், அதைப் பெறும் வழிதெரியாமல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே தேர்தல் அறிவிப்பு வரை போராடியே தீர்வது என சங்கங்கள் நடவடிக்கையை தொடர்கின்றன என்றனர்.
ஏதாவது அறிவிப்பரா
சத்துணவுத்துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் நுார்ஜஹான் கூறுகையில், “இதுவரை அறிவிப்பு எதுவும் வராததால் இன்று கறுப்பு உடையணிந்து ஆர்ப்பாடம் நடத்த உள்ளோம். நாளை (பிப்.17) சட்டசபை கூடுகிறது. இதில் ஏதாவது அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்க்கிறோம்," என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...