பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.
நம் நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது
அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 21 முதல் 29-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தேர்வுக்குரிய தற்காலிக விடைக்குறிப்பை என்டிஏ இன்று வெளியிட்டது. அவற்றை மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அதன்விவரங்களை உரிய ஆதாரங்களுடன் மேற்கண்ட தளத்தில் பிப்ரவரி 6-க்குள் தெரிவிக்க வேண்டும்.
மேலும், கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...