Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.03.2026

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு நாள்




 






திருக்குறள்: 

குறள் 605: 

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.  
              
விளக்க உரை: 

காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

பழமொழி :

Even a pin is good for something. 

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது உணவானது விவசாயி போன்ற பலர் உழைப்பில் வருகிறது.

2. எனவே உணவை வீணாக்க மாட்டேன்.

பொன்மொழி : 

இருக்கும் இடத்திலிருந்து தொடங்குங்கள். இருப்பதைப் பயன்படுத்துங்கள். முடிந்ததைச்  செய்யுங்கள் -ஆர்தர் ஆஷ்

பொது அறிவு : 

01. தென்னாட்டு தாகூர் என்று அழைக்கப்படுபவர் கவிஞர் யார்?

      கவிஞர்.வாணிதாசன்

 Thiru.Vanidasan

02. உலகின் நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

          இந்தியா-India

English words :

benevolent –kind, friendly and helpful to others.

நட்பிணக்கமும் உதவி மனப்பான்மையும் கொண்ட.

banter –friendly comments and jokes.

நட்பு முறையிலான குறிப்புரையும் கேலிப்பேச்சும்.

தமிழ் இலக்கணம்: 

 விலை விவரப் பட்டியல்/ விலை விபரப் பட்டியல் 
எது சரி?
இந்த சந்தேகம் எழும் போது அதன் 
 *வினைச்சொல்* 
*வேர்ச்சொல்*
இரண்டையும் பார்க்க வேண்டும்.

1. முல்லைத் திணை பற்றி *விவரி* .
2. இவர் ஒரு *விவரமான* ஆள்.
3. இவர் திட்டத்தை தெளிவாக *விவரித்தார்* 
மேற்கண்ட சொற்றொடர்களைப் பாருங்கள். விவரி, விவரித்து, விவரித்தல் 
போன்ற சொற்களைத்தான் பயன்படுத்துகிறோம். 
எனவே விவரம் என்பதே சரியான சொல்.

அறிவியல் களஞ்சியம் :

பூமியின் காந்த துருவங்கள் என்பது கோளின் காந்தப்புலக் கோடுகள் செங்குத்தாக இருக்கும் புள்ளிகள், மையத்தில் இருக்கும் இரும்பு நிக்கலின் திரவ இயக்கம் காரணமாக தொடர்ந்து மாறுகின்றன. வட காந்த துருவம் தற்போது கனடாவிலிருந்து சைபீரியாவை நோக்கி அலைந்து திரிந்து வேகத்தில் முடுக்கிவிடப்படுகிறது. அதே நேரத்தில் தெற்கு காந்த துருவம் அண்டார்டிகாவிலிருந்து தொலைவில் உள்ளது. இதனால் திசைகாட்டிகள் இந்தப் பகுதிகளுக்கு அருகில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. இந்தக் கம்பங்கள் நிலையானவை அல்ல; அவை புவியியல் காலத்தில் அலைந்து திரிந்து துருவ முனைப்பை மாற்றியமைக்கின்றன. பாறைகளில் பதிவுகளை விட்டுச் செல்கின்றன. ஆனால் மையத்தின் உருகிய இரும்பு மற்றும் நிக்கல், இந்த மாறும் புலத்தின் பின்னால் உள்ள இயந்திரமாகும்.  இது விண்வெளி கதிர்வீச்சுக்கு எதிரான ஒரு முக்கியமான கவசமாகும்.

மார்ச் 04

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்


தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.

பிறகு 1971ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. மும்பையை தலைமையகமாகக் கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன.

தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

ஏமாந்த சிறுத்தை

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

முக்கியமான நேரத்தில் முக்கியமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

04.03.2026

⭐மத்திய - மாநில உறவு: தமிழ்நாடு அரசுக்கு ஆதரவளித்த கர்நாடகா... நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐ஈரானின் 131 நகரங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 555 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

⭐ ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை:2-வது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை மோதுகிறது.

🏀உலகின் உயரிய விளையாட்டு விருதுக்கு இந்திய மகளிர் அணி பரிந்துரை. இந்தப் பிரிவில் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணி உள்பட 5 அணிகள் இந்தியாவுடன் போட்டியிடுகின்றன.

Today's Headlines


⭐ Centre–State Relations: Tamil Nadu has received support from Karnataka. Chief Minister M. K. Stalin expressed his gratitude.

⭐ In the attacks targeting 131 cities in Iran, 555 people have been killed so far.

⭐ Due to the conflict between Iran, United States, and Israel, India’s Ministry of Home Affairs has warned state governments that there is a possibility of violence breaking out in India.

🏀 Sports News

🏀 T20 World Cup: In the second semi-final, India cricket team will face England cricket team tomorrow.

🏀 The India women's national team has been nominated for the world’s highest sports award. In this category, five teams — including the England women's national football team — are competing against India.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive