Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

8 லட்சம் பேர் எழுதும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்

hindutamil-prod%2F2026-02-28%2F7ebuv50r%2F15252126 
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்​தேர்வு நாளை (மார்ச் 2) தொடங்கி 26-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இத்​தேர்​வில் 8.27 லட்​சம் பேர் பங்​கேற்​கிறார்​கள்.
 
தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, பிளஸ் 2 வகுப்​பு​களுக்கு பொதுத்​தேர்வு நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்பாண்​டுக்​கான பிளஸ் 2 பொதுத்​தேர்வு நாளை தொடங்கி 26-ம் தேதி நிறைவுபெறுகிறது. முதல்​நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்​களுக்​கான தேர்வு நடை​பெறும்.
 

இந்த தேர்வை மாநிலம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டுள்ள 3,412 தேர்வு மையங்​களில் 8 லட்​சத்து 27,475 பேர் எழுதுகின்​றனர். இதில் 7,545 பள்ளி​களில் இருந்து 7 லட்​சத்து 99,692 மாணவர்​கள், 27,783 தனித்​தேர்​வர்​கள் மற்​றும் 281 கைதி​களும் அடங்​கு​வர். மேலும் 7,465 மாணவர்​கள் ஸ்கிரைப் உதவி​யுடன் தேர்​வெழுதவுள்​ளனர்.

பொதுத்​தேர்​வுக்​கான அறை கண்​காணிப்​பாளர் பணி​யில் 44,624 ஆசிரியர்​கள் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். முறை​கேடு​களைத் தடுக்க 4,540 நிலை​யான மற்​றும் பறக்​கும் படைகள் அமைக்​கப்பட்​டுள்​ளன. அதே​போல், மாவட்ட ஆட்​சி​யர், முதன்​மை, வட்​டாரக் கல்வி அலு​வலர் மற்​றும் வரு​வாய்த் துறை அதி​காரி​கள் தலை​மை​யிலும் சிறப்பு கண்​காணிப்​புக் குழுக்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. 154 வினாத்​தாள் கட்​டுக்​காப்பு மையங்​களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்​கிய காவல்​துறை அதி​காரி​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

ஏற்​பாடு​கள், கட்​டுப்​பாடு​கள் தேர்வு மையங்​களில் குடிநீர்,இருக்​கை, மின்​சா​ரம், காற்​றோட்​டம், வெளிச்​சம் மற்​றும் கழிப்​பறை வசதி​கள் செய்யப்​பட்​டுள்ளன. இதுத​விர மாணவர்​களுக்​கும், ஆசிரியர்​களுக்​கும் பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்ளன.

தேர்வறைக்குள் செல்போன் உள்​ளிட்ட மின்​சாதனப் பொருட்கள்கொண்​டுவரத்தடை விதிக்கப்பட்​டுள்​ளது. ஹால்​டிக்​கெட்​டில் உள்ள விதிகளைப் பின்பற்றி மாணவர்​கள் நடக்க வேண்டும்.விடைத்​தாளில் நீலம் அல்​லது கருப்பு நிற பேனாவால் மட்​டுமே எழுத வேண்​டும்.

அதே​போல், விடைத்​தாள்களில் எவ்​வித சிறப்​புக் குறி​யீடு,தேர்வெண், பெயர் ஆகிய​வற்றை குறிப்​பிடக் ​கூ​டாது. மேலும், மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்​கான கூடு​தல் நேரம் உட்பட சிறப்பு சலுகைகள் வழங்​குதல் சார்ந்​தும் அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. ஆள்​மாறாட்டம் செய்​வது, துண்​டுத்​தாள் அல்​லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், விடைத்​தாள் மாற்​றம் செய்​தல் போன்ற ஒழுங்​கீன செயல்​களில் ஈடு​படும் மாணவர் மீது நடவடிக்கை எடுக்​கப்படும்.

அதி​கபட்சம் 3 ஆண்​டு​ அல்​லது நிரந்​தரமாக தேர்வெழுத தடைவிதிக்​கப்படும். ​தேர்வு குறித்த சந்​தேகங்​கள் மற்​றும் புகார்களைத் தெரிவிக்க 14417 மற்​றும் 94983 83075, 94983 83076 எண்​களை​ தொடர்​புகொள்​ளலாம்​.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive