இது தொடர்பாக, சுகாதாரத்துறை செயலர் பி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் எம்.ஃபில். கிளினிக்கல் சைக்காலஜி என்ற படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த படிப்புக்கு பதிலாக எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி என்ற பெயரில் புதிய படிப்பை வழங்குமாறு இந்திய மறுவாழ்வுக் கவுன்சில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை அறிவுறுத்தியது.
ஆண்டுக்கு 18 மாணவர்கள்
அதன் பேரில், வரும் கல்வி ஆண்டு (2026-2027) எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பை தொடங்கும் வகையில், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மூலமாக, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை இயக்குநரின் கருத்துரு அரசுக்கு வரப்பெற்றது.
அக்கருத்துருவை ஏற்று கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் 2026-27-ம் கல்வி ஆண்டில் எம்.ஏ. கினிக்கல் சைக்காலஜி படிப்பை தொடங்கவும், ஆண்டுதோறும் 18 மாணவர்களை சேர்த்துக் கொள்ளவும் அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.
இப்புதிய படிப்புக்கு இந்திய மறுவாழ்வுக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்திடம் உரிய அனுமதி பெறப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...