
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2026-27) பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதற்காக எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெயர்,பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் பயன்படுத்தப்படவுள் ளன. எனவே அந்த விவரங்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் அக்.16-க்குள் சரிபார்த்து உறுதிசெய்ய வேண்டும். அவற்றில் திருத்தங்கள் இருந்தால் உடனே மேற்கொள்ள வேண்டும்
பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்களிடம் இருந்து பெற்ற பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகலின் அடிப்படையிலேயே மாணவர்களின் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவரின் பெயரை தமிழில் பதிவேற்றம் செய்யும் போது தலைப்பெழுத்தும் (இன்ஷியல்) தமிழில் இருக்க வேண்டும். பெயர்ப் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படுகிறது.
எனவே, மாணவர்களின் விவரங்களில் தவறுகள் ஏதும் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர், பள்ளித் தலைமையாசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும். எக்காரணத்தைக் கொண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு திருத்தங்கள் கோரி தேர்வுத் துறைக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...