Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

.com/ தகுதியுள்ள மாணவர்கள் அடுத்தமாதம் 21-ந் தேதி வரை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் ரேவதி

தஞ்சாவூர்,

கல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை திட்டம்

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூ ரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற் றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கு 2026-27-ம் ஆண்டிற்கான பிரதம மந் திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் நிபந்தனைகளின் அடிப்படையில் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங் கப்படுகிறது. பாலிடெக்னிக் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் பயி லும் மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகா மல் இருக்க வேண்டும்.

 

21-ந் தேதி கடைசி நாள்

இதற்கான விண்ணப்பங்கள் https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெறப்படுகிறது. தகுதியுள்ள மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கு என உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி இணையதளத்தின் மூலம் அடுத்தமாதம் (அக்டோபர்) 21-ந் தேதி வரை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவலக நேரங்களில் அணுகி சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive