Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளின் துணையாளருக்கு கட்டணமில்லா பயண திட்டத்தினை விரிவுபடுத்தி அரசாணை (நிலை) எண்.18 , நாள் : 27.10.2026 வெளியீடு


அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளின் துணையாளருக்கு கட்டணமில்லா பயண திட்டத்தினை விரிவுபடுத்தி அரசாணை (நிலை) எண்.18 , நாள் : 27.10.2026 வெளியீடு

G.O.Ms.No.18 - Cost Free Travel

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை - தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பயன்படுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் (Benchmark Disability) மற்றும் தனியாக செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் அரசு போக்குவரத்துக் கழகங்களின் மாநகர/நகர தாழ்தளப் பேருந்துகள், விரைவு பேருந்துகள் (Express). LSS, டீலக்ஸ் (Deluxe). புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளில் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) கட்டணமில்லா பயண திட்டத்தினை விரிவுபடுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-2.2)த் துறை

அரசாணை (நிலை) எண்.18 , நாள் : 27.10.2026

பராபவ, ஐப்பசி -10.

திருவள்ளுவர் ஆண்டு, 2057,

படிக்கப்பட்டது:

1. அரசாணை (நிலை) எண்.01, மாற்றுத்திறனாளிகள் நல(மா.தி.ந-2)த் துறை, நாள் 03.06.2021.

2. அரசாணை (நிலை) எண்.18, மாற்றுத்திறனாளிகள் நல(மா.தி.ந.2.2)த் துறை, நாள்.16.09.2025.

3. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் 5.5.6:13390003/2-3/2026, 1:16.09.2026.

ஆணை:

மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2016-ஆம் ஆண்டு உரிமைகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான 21 வகையான மாற்றுத்திறன்களில், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் பாதிப்பு தன்மை கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் (Escort) ஒருவருக்கு தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White Board) கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள 21 வகையான மாற்றுத்திறனாளிகளில், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிப்பு தன்மை கொண்ட (Benchmark Disability) மாற்றுத்திறனாளிகள், உதவியாளர் ஒருவருடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சாதாரண கட்டணப் பேருந்துகளில் (White Board) அனுமதிக்கப்பட்ட கட்டணமில்லாமல் பயணிக்கும் விடியல் பயணத் திட்டத்தினை, தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளிலும் 2025-2026-ஆம் நிதியாண்டு முதல் விரிவுபடுத்திடவும், அதன்படி 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிப்புத் தன்மை கொண்ட, (Benchmark Disability) மலைப்பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள். துணையாளர் (Escort) ஒருவருடன் 100% மலைப்பகுதிகள் (Fully Ghat) மற்றும் பகுதி மலைப்பகுதிகளில் (Partially Ghal) இயக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான சாதாரண கட்டணப் பேருந்துகளில் பேருந்து வசதி உள்ள பகுதிகளில் (Served Area) 35 கி.மீ. வரையிலும் மற்றும் பேருந்து வசதியில்லாத பகுதிகளில் (Unserved Area) 40 கி.மீ. வரையிலும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

3. இந்நிலையில், 2026-2027-ஆம் நிதி ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது, 31.08.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் இன்னபிறவற்றுடன் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:-

"தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பயன்படுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் (Benchmark Disability) மற்றும் தனியாக செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் அரசு போக்குவரத்து கழகங்களின் மாநகர/நகர தாழ்தளப் பேருந்துகள், விரைவு பேருந்துகள் (Express). LSS, டீலக்ஸ் (Deluxe), புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளில் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்."

4. மேற்குறிப்பிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தற்போது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் தனது செயற்குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் கல்வி, தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பணி மற்றும் சுய தொழில் புரியவும், மறுவாழ்வு மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், தங்கள் இருப்பிடத்திலிருந்து 100 சதவீதம் கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் செல்ல பேருந்து பயணச் சலுகை அட்டை வழங்கப்படுவதாகவும், மேலும் நகரப் பேருந்துகள் மட்டுமல்லாது இதர பேருந்துகளில் பார்வை மாற்றுத்திறனாளிகள் 100 கிலோமீட்டர் தூர எல்லைக்குள் எவ்வித நிபந்தனையுமின்றி கட்டணமில்லாமல் செல்லச் சலுகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

5. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்குத் தற்போது பல்வேறு வழிகளில் வழங்கப்பட்டு வரும் பேருந்து பயணச் சலுகைகளை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் மாநகர/நகர சாதாரண, விரைவுப் பேருந்துகள், தாழ்தளப் பேருந்துகள், LSS, டீலக்ஸ் (Deluxe) பேருந்துகளிலும் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) மற்றும் புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சாதாரண கட்டண பேருந்துகளில் (குளிர்சாதனப் பேருந்து நீங்கலாக) 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் தங்களது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையைப் (UDID) பயன்படுத்தி கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ளவும் மற்றும் தனியாக செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் செல்வதற்கும் சில நிபந்தனைகளை பின்பற்றி அனுமதி வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.


Click Here To Download







0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive