பள்ளிக்கல்வித்துறையில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் (ஆர்.டி.ஐ.,) மூலம், பொதுமக்கள் கேட்கும் தகவல்களுக்கு உரிய முறையில் பதிலளிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் என்பவர், 2024ல் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம் வழியாக, பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் மனு அளித்தார். அம்மனுவுக்கு கல்வித்துறை அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என மேல்முறையீடு செய்தார். தமிழ்நாடு தகவல் ஆணையத்தில், சமீபத்தில் நடந்த நேரடி விசாரணையில், கல்வித்துறை உரிய தகவல்களை மனுதாரருக்கு அளிக்காதது தெரிந்துள்ளது. இதுபோன்ற அலட்சியங்களால், போதிய தகவல் கிடைக்காதோர் மேல்முறையீடு செய்வது, வழக்கு தொடுப்பது அதிகரிக்கிறது. இதனால் மாவட்ட வாரியாக ஆர்.டி.ஐ., மூலம் கேட்கப்பட்ட மனுக்கள் அதுசார்ந்த நடவடிக்கைகள் குறித்து, இயக்குனரகத்திற்கு தகவல் அளிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காரணம் சொல்ல வேண்டும்
ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ‘இனிவரும் காலங்களில், ஆர்.டி.ஐ., மனுக்கள் எதுவும் தேங்க கூடாது. உரிய கால இடைவெளியில் கேள்விகளுக்கான பதிலை அனுப்புவது அவசியம். பதில் திருப்திகரமாக இல்லை என்பதால், மேல்முறையீடு செல்லும் பட்சத்தில், உரிய மாவட்ட அலுவலர்களே, அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
விதிவிலக்குக்கு உட்பட்ட தகவல்கள் கேட்டால், எதனால் பதில் அளிக்க முடியவில்லை என்ற காரணம் குறிப்பிட வேண்டுமென, இயக்குனரகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...