Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வானிலை மையம் தகவலை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை - அமைச்சர் ராஜ்மோகன்

dailythanthi%2F2026-10-18%2Fqkxls7bt%2FUntitled-14

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. கடந்த 2 நாட்களாக மாலை, இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை 6:00 மணிக்கு லேசான மழை துவங்கியது. படிப்படியாக மழை வேகம் எடுத்தது. நள்ளிரவு 12:00 மணி வரையும் விடாமல் கன மழை கொட்டி தீர்த்தது. 30க்கும் மேற்பட்ட இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிக கனமழை பதிவாகி உள்ளது. ஆங்காங்கே தேங்கி இருக்கும் நீரை அகற்ற அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது அரசியல் செய்யும் நேரம் இல்லை

இந்த நிலையில், அமைச்சர் ராஜ்மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது நிருபர் ஒருவர், மாநகராட்சி நிர்வாகம் ஒரு சைடும், அரசு நிர்வாகம் ஒரு சைடும் போவதுதான் இந்த மழை பிரச்சினைக்கு காரணமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு “அனைவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்வதுதான் முக்கியம். குற்றம் சுமத்தி தாண்டி செல்வதில் எங்களுக்கு எந்த நாட்டமும் கிடையாது. அனைத்து அதிகாரிகளையும், அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் அரவணைத்து அவர்களுடன் சேர்ந்து மக்கள் பணி செய்வதுதான் முக்கியம். இது அரசியல் செய்யும் நேரம் கிடையாது. மக்கள் பணி செய்யும் நேரம்” என அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்பார்க்காத அளவு மழை

இதனையடுத்து பள்ளி விடுமுறை குறித்து அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது;-

“வானிலை மையம் தரும் தகவல்களைப் பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை பற்றி முடிவுகள் எடுக்கப்படும். எதிர்பார்க்காத அளவு மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் நீரை வெளியேற்றிவிட்டோம். மழை பாதிப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய்யிடம் மணிக்கு ஒருமுறை தெரிவித்து வருகிறோம்.முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”

இவ்வாறு அவர் கூறினார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive