நடப்புக் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைபேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து திருத்தம் இருந்தால் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
மாணவர் விவரங்களைச் சரிபார்த்து, தேர்வுத் துறை இணையதளத்தில் அக்.7-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்கள் நலன் கருதி இதற்கான அவகாசம் அக்.12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பெயர்ப் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் பணிகளை கவனமாக மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த கூறப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...